கன்னட சினிமா துறையின் இளம் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வரும் யாஷ் நடிப்பில் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியான படங்களில் ஒன்றுதான் கே.ஜி.எஃப். கன்னட மொழிப் படமான இது, ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் யாஷ் என்பவர் நடித்துள்ள இந்த திரைப்படம் இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வெளியாகியுள்ளது. கன்னடம் ,தமிழ் மொழியில் நேரடியாக வெளியாகியது.
இதையும் படியுங்க : அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள மணிரத்னம்.! அவரின் தற்போதைய நிலை என்ன.!
யாஷ் கடந்த ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி தந்தது கே ஜி எப் திரைப்படம் தான். யாஷ் கடந்த 2016 ஆம் ஆண்டு ராதிகா பண்டித் என்ற நடிகையை திருமணம் செய்த்துக்கொண்டார்.
இவர்கள் இருகிவருக்கும் 2018 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால் யாஷ்சை விட அவரது மனைவி இரண்டு வயது மூத்தவர். இதுநாள் வரை தனது மகளின் புகைப்படத்தை வெளியிடாத யாஷ் முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கே ஜி எப் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது கேஜிஎஃப் -2 எப்போது வரும், ஷூட்டிங் தொடங்கப்பட்டதா போன்ற பல கேள்விகள் எழுந்த நிலையில் படக்குழு, ஷூட்டிங் தொடங்கப்பட்டு விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் துவங்கியது.