கே ஜி எப் நடிகர் யாஷுக்கு பிறந்த இரண்டாவது குழந்தை. குவியும் வாழ்த்துக்கள்.

0
13681
yash
- Advertisement -

மற்ற மொழிகளில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்திருக்கிறது. அதிலும் தெலுங்கில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படம் தமிழில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருந்தது. நல்ல படங்கள் தமிழில் வரவேற்பறை பெறுவதை அறிந்த மற்ற மொழி திரைப்பட தயாரிப்பாளர்கள் பலரும் தமிழிலும் படங்களை வெளியிட துவங்கினார்கள். பெரும்பாலும் தெலுங்கு மற்றும் இந்தி படங்கள் தான் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதை நாம் கண்டிருக்கிறோம்.

-விளம்பரம்-

ஆனால், கன்னட படங்கள் தமிழில் வெளியாவது மிகவும் அரிய விஷயம் ஆகும் ஆனால், கன்னடத்தில் வெளியான கேஜிஎப் திரைப்படம் அதற்கு ஒரு .விதிவிலக்காக அமைந்திருந்தது. கன்னடத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘கே ஜி எப்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. கன்னட சினிமா துறையின் இளம் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வரும் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியான படங்களில் ஒன்றுதான் கே.ஜி.எஃப். கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் யாஷ் என்பவர் நடித்து இந்த திரைப்படம் இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வெளியாயானது.

இதையும் பாருங்க : தேவர் ஜெயந்தியில் தந்தை சிலை திறந்த சரவணன். பிக் பாஸ் பிரபலங்கள் பங்கேற்பு.

- Advertisement -

மேலும், கன்னடம் ,தமிழ் மொழியில் நேரடியாக வெளியாகியது. அதே போல இந்தி, மலையாளம் என்று மற்ற மொழிகளிலும் வெளியாகி இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்தது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த யாஷ் கடந்த ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி தந்தது கே ஜி எப் திரைப்படம் தான். யாஷ் கடந்த 2016 ஆம் ஆண்டு ராதிகா பண்டித் என்ற நடிகையை திருமணம் செய்த்துக்கொண்டார். இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால் யாஷ்சை விட அவரது மனைவி இரண்டு வயது மூத்தவர்.

Image result for kgf yash daughter"

இவர்கள் இருகிவருக்கும் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அதே சமயத்தில் தான் யாஷ் நடித்த ‘kgf ‘ படமும் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது. குழந்தை பிறந்து பல மாதங்கள் ஆன நிலையில் தனது மகளின் புகைப்படத்தை வெளியிடாத யாஷ் கடந்த சில மாதங்களுக்கு முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார். மேலும், தனது மகளுக்கு ஆர்யா யாஷ் என்று பெயர் வைத்துள்ளார் யாஷ். அதனை ஒரு அழகிய வீடியோ மூலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் யாஷ்.

-விளம்பரம்-

இந்த நிலையில் யாஷ்ஷின் மனைவி ராதிகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். சமீபத்தில் இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனது மகன் பிஞ்சு கையால் தனது விரலை பிடித்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் யாஷ். கே ஜி எப் ஹீரோவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதை ஒட்டி பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். யாஷ் நடித்து வரும் கே ஜி எப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் கே ஜி எப் முதல் பாகம் வெளியானது போன்று கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெளியாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

Advertisement