Kgf படத்தில் நீங்க விசில் அடித்து கைதட்டியதர்க்கு முக்கிய காரணம் இந்த விஜய் சேதுபதியின் ரீல் அண்ணன் தான்.

0
1252
kgf
- Advertisement -

கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவர் கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இது ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. முதல் பாகம் இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது. அதுமட்டும் இல்லாமல் முதன் முறையாக ஒரு கன்னட படம் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது என்றால் யாஷ் நடித்த “கே ஜி எப்” என்பது குறிப்பிடத்தக்கது . மேலும், இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே யாரும் எதிர்பாராத வகையில் 200 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தது. இதனால் இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் விரைவாக ஆரம்பிக்கப்பட்டது.

-விளம்பரம்-
Kgf

மேலும், 3 ஆண்டுகள் கழித்து கே ஜி எஃப் 2 படம் நேற்று வெளியாகி உள்ளது.இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுடன் கேஜிஎப் 2 படம் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஸ்கிரீன்களில் உலகம் முழுவதும் வெளியானது. படத்தில் கருடனைக் கொன்று கேஜிஎப்பில் கால் தடம் பதித்து இரண்டாம் கதையை துவங்குகிறார் யாஷ் .

- Advertisement -

கேஜிஎப் படத்தின் கதை:

ஆனால், அது அங்கிருக்கும் பலருக்கு பிடிக்காமல் போகிறது. கேஜிஎப் இடத்தில் இருந்து யாஷை தூக்க வேண்டும் என்று பலரும் திட்டங்களை தீட்டுகின்றனர். இறுதியில் யாஷ் கேஜிஎப் மக்களை காப்பாற்றினாரா? எதிரிகளை துவம்சம் செய்தாரா? மக்களின் காப்பாற்றினாரா? என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும், இந்த படத்தில் தமிழ் வசனகர்த்தாவாக அசோக் பணிபுரிந்திருக்கிறார். கேஜிஎஃப் படத்தில் இவருடைய வசனங்கள் எல்லாமே மீம்ஸ் டெம்ப்ளேட்களாக சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.

அசோக் நடித்த படங்கள்:

இவர் வேற யாரும் இல்லைங்க, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் விஜய் சேதுபதி அடிக்கடி கட்டிப்பிடிக்கும் நாகராஜ் அண்ணன் தான் கேஜிஎப் படத்தின் தமிழ் வசனகர்த்தா. இந்த நிலையில் ஏற்கனவே அசோக் அளித்திருந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறி இருப்பது, தஞ்சாவூர் கரந்தைக் கலைக் கல்லூரியில் நான் படித்தேன். அப்போதிருந்தே கலைத்துறை மீது எனக்கு அதிக ஆர்வம். மைம், ஸ்கிட், ஃபோக் டான்ஸ்னு தொடர்ந்து ஆறு வருடம் நேஷனல் லெவல் கோல்ட் மெடல் வாங்கினேன். அந்த தாக்கம் தான் சினிமாவுக்கு கிளம்பி வந்து விட்டேன். கமல் சார் மூலம் தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

சினிமா பயணம் குறித்து அசோக் கூறியது:

அதற்கு பிறகு நான் படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்து இருக்கிறேன். பிறகு தான் கேஜிஎப் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், எனக்கு கன்னடம் அவ்வளவாக தெரியாது. கேஜிஎஃப் படத்தின் மூலம் தான் முதல் முறையாக வசனம் எழுதினேன். அதற்கு முன்பு ஆயில் ரேகை என்கிற படத்திற்கு வசனம் எழுதி இருக்கிறேன். கேஜிஎப் படம் பண்ணும் போது நான் அவர்களிடம் கேட்டது ஃப்ரீடம் மட்டும் தான். இதற்காக 150 குரல்களுக்கு மேல டெஸ்ட் பண்ணினேன். டப்பிங் பண்ணும் போது இயக்குனர் கொண்டுவர நினைத்த உணர்வை கொடுத்து கவனமாக பார்த்துக் கொண்டேன். கன்னடத்தில் சில வசனங்களை ரொம்ப எமோஷனலாக பேசியிருப்பார்கள். நான் நம்ம ஊருக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் மாற்றி பண்ணியிருந்தேன்.

கேஜிஎப் படத்தின் அனுபவம்:

முழு படத்திற்கான வசனங்களை யாஷ் இடம் ஐந்து முறை படித்துக் காட்டி ஓகே வாங்கிய பிறகு தான் நடிக்க ஒத்துக்கொண்டேன். டயலாக் அவருக்கு ரொம்ப பிடித்து இருந்தது. நான் வசனம் மட்டும் எழுதிய முதல் படம். படத்தை முடித்து பார்க்கும் போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. தமிழில் அஜித், விஜய் பேசினால் நம்ம ஆளுங்க கைதட்டி ரசிப்பார்கள். ஆனால், யாஷ் மாதிரி புதுசா வருகிற நடிகர் ஒருவர் பேசினால் சிரிக்கிற மாதிரி இருக்கும். அதற்காகத்தான் நான் ரொம்ப பயந்தேன். டப்பிங் ஆர்டிஸ்ட்களை வைத்து முதல் பாகம் பண்ணினோம். தமிழில் நான் நினைத்ததை விட இரண்டாம் பாகமும் நன்றாக வந்து இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement