அயோத்தியா ராமர் கோவில் கட்ட ராக்கி பாய் இத்தனை கோடி கொடுத்தாரா ? தீயாய் பரவும் முகநூல் பதிவு.உண்மை என்ன ?

0
342
yash
- Advertisement -

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கேஜிஎப் யாஷ் பணம் கொடுத்து இருக்கிற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவரின் இயற்பெயர் நவீன்குமார் கௌடா. இவருடைய நிக் நேம் தான் யாஷ். அதுவே ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். யாஷ் முதலில் மேடை நாடகங்களில் தான் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் சின்னத்திரை சீரியலில் நடிக்கத் துவங்கி இருந்தார்.

-விளம்பரம்-

இவர் முதலில் நடித்த சீரியல் நந்தகோகுலா. பிறகு சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பின் இவர் கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும், இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இது ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. முதல் பாகம் இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது.

- Advertisement -

கேஜிஎப் படம்:

அதுமட்டும் இல்லாமல் முதன் முறையாக ஒரு கன்னட படம் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது என்றால் யாஷ் நடித்த “கே ஜி எப்” தான் . அதோடு இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை பெற்று இருந்தது. இந்த படம் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. யாரும் எதிர்பாராத வகையில் இந்த படம் 200 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தது. இதனால் கேஜிஎப் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது.

கே ஜி எஃப் 2 படம்:

இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார் மற்றும் பவுன் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது பான் இந்தியா ஸ்டாராக இருக்கிறார் யாஷ்.

-விளம்பரம்-

ராமர் கோயில் கட்ட யாஷ் கொடுத்த நன்கொடை:

இப்படி ஒரு சூழ்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட யாஷ் அவர்கள் 50 கோடி நன்கொடை அளித்ததாக சோசியல் மீடியாவில் வெளியான தகவல் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. இந்த செய்தி வயதானதை தொடர்ந்து சிலர் அவரை பாராட்டியும், விமர்சித்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், இது தொடர்பாக சந்தோஷ் திரிபாதி என்ற பயனர் ஒருவர், யாசின் புகைப்படத்தை பகிர்ந்து நடிகர் யாஷ் குமார் ராம் மந்திரில் ராம்லாலாவைச் சந்தித்து ராமர் கோயில் கட்டுவதற்கு 50 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்ததாக குறிப்பிட்டு இருந்தார்.

உண்மை நிலவரம்:

ஆனால், இந்த செய்தி போலியானது. இது போன்று அவர் எந்த ஒரு அறிக்கையும் கூறவில்லை. அந்த புகைப்படம் கே ஜி எஃப் 2 படம் வெளியாவதற்கு முன்பு ஏப்ரல் 2022ல் யாஷ் திருப்பதிக்கு சென்ற போது எடுத்த புகைப்படம். கே ஜி எப் 2 படத்திற்கு பிறகு யாசின் அடுத்த படம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும், பிரசாந்த் நீல்ஸ் இயக்கம் சலார் படத்தில் யாஷ் அவர்கள் ராக்கியாக ஒரு கேமியோ தோற்றத்தில் தோன்றியிருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளிவந்து இருக்கிறது.

Advertisement