பாகுபலி, deadpool, kgf ராக்கி பாய் என்று தமிழில் நீங்கள் கேட்ட பல மாஸ் குரலின் சொந்தக்காரர் இவர் தான் – யார் தெரியுமா ?

0
1636
sekar
- Advertisement -

பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பலர் தங்களது படங்களுக்கு டப்பிங் செய்து விடுவார்கள். இதற்கு முக்கிய காரணம் பெரும்பாலான நடிகர், நடிகைகள் வேறு மாநிலத்தில் இருந்து வந்தது, பிற மொழி படங்களை டப்பிங் செய்வது, அவர்களின் மொழி உச்சரிப்பு அவ்வளவு நன்றாக இருப்பதில்லை, கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல டப்பிங் கலைஞர்களின் குரல்களை தேர்ந்தெடுப்பது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை என பல பிரபல ஹீரோக்களின் படங்களுக்கு குரல் கொடுத்தவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சேகர்.

-விளம்பரம்-

இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மட்டுமில்லாமல் நடிகரும் ஆவார். மேலும், இவர் சிறு வயதிலேயே தன்னுடைய டப்பிங் ஆர்டிஸ்ட் கேரியரை தொடங்கினார். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகர்களான அஜித், பிரபாஸ், மகேஷ் பாபு, நாகஅர்ஜுனா, அல்லு அர்ஜுன் என பல நடிகர்களின் படங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார். மேலும், இவர் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த கொடைக்கானல் என்ற படத்தில் நந்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

சேகர் நடித்த படங்கள்:

அதற்கு பிறகு பயணம், என்னை அறிந்தால், அடங்கமறு போன்ற பல படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் தமிழில் ஜீவா நடித்த சீறு என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அதுமட்டுமில்லாமல் தனுஷ் நடித்த விளம்பரத்தில் கூட சேகர் நடித்திருக்கிறார். இந்நிலையில் சேகர் பற்றிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில் அவர் டப்பிங் குரல் கொடுத்த படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் படங்கள்:

அதைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். ஹாலிவுட்டில் வெளியான deadpool படத்திற்கு இவர் தான் குரல் கொடுத்திருந்தார். தமிழில் இவருடைய குரல் தான் இந்தப் படம் மிகப் பெரிய அளவில் ஹிட்டானது என்றும் கூறப்படுகிறது. ஆனால், deadpool படத்தின் இரண்டாம் பகுதிக்கு இவர் குரல் கொடுக்கவில்லை. இது ரசிகர்கள் பலருக்கும் ஏமாற்றமாக இருந்தது. பின் ஆங்கிரி பேர்ட் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் ரெட் பறவைக்கு இவர் தான் குரல் கொடுத்திருந்தார்.

-விளம்பரம்-

பாகுபலி படம் :

அதே போல் வேகமாக போகிற ஜக் பறவைக்கும் இவர்தான் குரல் கொடுத்திருந்தார். ஆனால், இரண்டிற்குமே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு பயங்கர வித்தியாசப்படுத்தி குரல் கொடுத்திருந்தார். அதேபோல் இந்தியாவையே பிரமிப்பில் ஆழ்த்திய பாகுபலி படத்தில் பாகுபலியாக நடித்த பிரபாஸுக்கு சேகர் தான் குரல் கொடுத்திருந்தார். இவருடைய குரலுக்காகவே இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்து என்று சொல்லலாம்.

கேஜிஎப் ராக்கி பாய்:

அந்த அந்த அளவிற்கு குரலில் கம்பீரம், வீரம் இருந்தது. அது மட்டுமில்லாமல் சகோ, ரிபெல் போன்ற படங்களுக்கும் சேகர் தான் குரல் கொடுத்திருந்தார். இன்னொரு முக்கியமான ஹீரோ யாரு என்றால், கேஜிஎப் யாஷ். தற்போது கேஜிஎப் 2 படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ராக்கி பாய்க்கு குரல் கொடுத்தவர் சேகர் தான். தமிழில் கன்னட மொழி படம் வெற்றி அடைந்ததற்கு சேகரின் குரல் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

kgf

வசனகர்த்தா அசோக் :

சேகருக்கு kgf பட வாய்ப்பு கிடைத்ததற்க்கு முக்கிய காரணம் இந்த படத்தின் வசனகர்த்தா அசோக் தான். இதற்காக 150 குரல்களை அவர் டெஸ்ட் செய்து இருக்கிறார். டப்பிங் பண்ணும் போது இயக்குனர் கொண்டுவர நினைத்த உணர்வை கொடுத்து கவனமாக பார்த்துக் கொண்ட அவர், இறுதியில் சேகரின் குரலை கேட்ட பின்னர் திருப்தி அடைந்து இருக்கிறார். ராக்கியை தமிழ் ரசிகர்கள் கொண்டாட சேகரும் ஒரு காரணமே.

Advertisement