ராக்கிக்கு வழிவிடும் ‘ரா’ ஏஜென்ட் ராகவன் – பீஸ்ட் தியேட்டர்களை காலி செய்யும் கேஜிஎப் 2

0
369
- Advertisement -

விஜய்யின் பீஸ்ட் படத்தை தூக்கிட்டு தியேட்டர்களில் கேஜிஎப் 2 வெளியிடப்பட்டு உள்ள தகவல் தற்போது சோசியால் மீடியாவில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். கடைசியாக விஜய் நடித்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்துஇருக்கிறார்கள். மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருந்தது.

-விளம்பரம்-

பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். படத்தில் ஒரு மால்-லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். எதர்ச்சையாக கடத்தப்படும் மால்-லில் விஜயும் சிக்கிக் கொள்கிறார். விஜய் மால்-லையும், மக்களையும் எப்படி காப்பாற்றினார்? இதன் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

- Advertisement -

பீஸ்ட் படத்தின் கதை:

அதுமட்டும் இல்லாமல் நேற்று வெளியான கேஜிஎஃப் 2 படத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது பீஸ்ட் படம் ஒண்ணுமே இல்லை என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும், விஜய் இந்த படத்துக்கு எப்படி ஓகே சொன்னார்? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இப்படி எக்கச்சக்கமான நெகட்டிவான விமர்சனங்கள் வந்து இருந்தாலும் வசூலில் பீஸ்ட் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாடு, கேரளா என படம் வெளியான அனைத்து பகுதிகளிலும் இதே ரியாக்சன் தான் இருந்துள்ளது.

பீஸ்ட் படத்தின் நிலைமை:

படம் வெளியாவதற்கு முன்பு இப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும் என்று காத்திருந்த படக்குழுவுக்கு இது ஏமாற்றமாக அமைந்துள்ளது. வசூல் ரீதியாக பார்க்கும் போது இதற்கு முன்பு இல்லாத அளவு தொகையை வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அதிக தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆனதால் பாக்ஸ் ஆபிஸில் வசூலை முறியடித்து இருப்பதாக சினிமா வட்டாரம் கூறப்படுகின்றன. இந்த நிலையில் விஜய்யின் பிஸ்ட் படம் வெளியான திரையரங்களில் கே ஜி எஃப் 2 படம் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

கேஜிஎப் 2 படம் குறித்த தகவல்:

பீஸ்ட் படத்துக்கு ஒதுக்கப்பட்ட திரையரங்கில் எல்லாம் கேஜிஎப் 2 படம் மாறி உள்ளன என்று கூறப்படுகிறது. உலகம் முழுவதும் 10 ஆயிரம் தியேட்டர்களில் கேஜிஎப் 2 படம் வெளியாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் 250 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போது கேஜிஎப் 2 படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றிருப்பதால் ஒரே நாளில் கூடுதலாக 350 தியேட்டர்களில் கேஜிஎப் 2 திரைப்படம் வெளியிடப்பட்டது. மேலும், நாளை இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இன்னும் 100 தியேட்டர்களில் படத்தை வெளியிட தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

திரையரங்கில் தூக்கிய பீஸ்ட் படம்:

ஆகவே பீஸ்ட் படத்தை தூக்கி கேஜிஎப் 2 வெளியிட நிறைய தியேட்டர் உரிமையாளர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். இதனால் கேஜிஎஃப் 2 படத்துக்கு கிடைக்கும் வரவேற்பும் வசூலும் படக்குழுவிற்கு உற்ச்சாகப் படுத்தியுள்ளது. இது பீஸ்ட் ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகம் இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது கே ஜி எஃப் 2 படம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார்.

KGF 2 Review | கே ஜி எஃப் விமர்சனம்

கேஜி எப் 2 படம் பற்றிய தகவல்:

இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் 2 மடங்கு மாசாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

Advertisement