தக் லைப் படத்தில் குஷ்பூ மகள் அனந்திகா இடம் பெற்று இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம். தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநருக்கு இவ்வளவு ரசிகர் பட்டாளமா! என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு இயக்குநர் மணிரத்னமிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளி வந்த படம் பொன்னியின் செல்வன்.இந்த படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்து இருக்கிறார். பல ஆண்டு கால கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் காவியங்களில் கதையை திரைப்படமாக எடுத்து இருந்தார் மணிரத்தினம். இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை அடுத்து தற்போது மணிரத்தினம்-கமல் கூட்டணியில் தக் லைப் படம் உருவாகி இருக்கிறது.
தக் லைஃப் படம்:
ஏற்கனவே கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணியில் நாயகன் என்ற படம் வெளியாகி இருந்தது. கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகிறது.
இந்த தக் லைஃப் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இருக்கிறார். இன்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் கமலஹாசனின் தக் லைப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை தான் பெற்று வருகிறது.

தக் லைப் படத்தில் குஷ்பூ மகள்:
மேலும், இந்த படத்தில் மணிரத்தினத்திற்கு உதவி இயக்குனர்கள் பலர் பணி புரிந்திருக்கிறார்கள். அதில் குஷ்பூ- சுந்தர்.சி மகள் அனந்திகாவும் ஒருவர் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக குஷ்பூ தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், மணிரத்தினம் படத்தில் என் மகளின் பெயர் வந்திருப்பதை பார்க்கும்போது ஒரு பெற்றோராக பெருமையாக இருக்கிறது.

நெகிழ்ச்சியில் குஷ்பூ:
முழங்காலில் முறிவு ஏற்பட்டதால் கொஞ்ச காலம் மட்டும் தான் அவளால் உதவியாளராக பணியாற்ற முடிந்தது. ஆனால், மணி சாரிடமிருந்து அவள் பெற்ற அறிவும், கற்றுக் கொண்ட விஷயங்களும் அவளுடன் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும். இந்த அனுபவம் உண்மையிலேயே ரொம்ப அற்புதமானது. அவளுடைய பெயரை படத்தில் இடம்பெறச் செய்த உங்களின் பெரிய மனதிற்கு நன்றி சார் என்று கூறி இருக்கிறார்.

குஷ்பூ மகள்கள்:
மேலும், குஷ்பு மற்றும் சுந்தர் சி தம்பதியருக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் மிகவும் குயூடாக பப்லியான தோற்றத்தில் தான் இருந்தார்கள். இதனால் இவர்கள் உருவத்தை வைத்து பல முறை பலரும் கேலி கிண்டல்களை செய்து இருந்தார்கள். பின் குஷ்பூ மகள்கள் உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறிய இருந்தார்கள். மேலும், குஷ்புவின் மகள் அவந்திகா லண்டனில் நடிப்பு பயிற்சி பெற்று வருகிறாராம். இவருக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வமும் இருப்பதால் கூடிய விரைவிலேயே இவர் சினிமாத்துறையில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.






