முன்னாடி ரஜினியின் ஜோடி, இப்போ தலைவர் 168 படத்தில் குஷ்புவின் கதாபாத்திரம் இதுவா?

0
4801
kushboo
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . சமீபத்தில் தான் பொங்கல் பண்டிகை முன்னிட்டு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் “தர்பார்” படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், ஸ்ரேயா சரண், பிரதீப் பப்பர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். தர்பார் படத்தை தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்த படம் “தலைவர் 168”. இயக்குனர் சிவாவும், ரஜினிகாந்தும் முதன் முதலாக இந்த படத்தில் தான் இணைகிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஆனாலும், ‘அண்ணாத்த, மன்னவன், வியோகம்’ போன்ற பல பெயர்கள் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டு தான் இருக்கின்றது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா நடிக்கிறார்கள். நடிகர் ரஜினியுடன் இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு வெற்றி அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டராக பணியாற்றி உள்ளார். டி.இமான் அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் தலைவர் 168 படத்தில் நடிகை குஷ்பூ நடிப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இந்த படத்தில் குஷ்புவின் கதாபாத்திரம் என்னவென்று வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ராமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்துக்கு இந்த படத்தில் இரண்டு மனைவிகள். ரஜினியின் முதல் மனைவியாக குஷ்பூ நடிக்கிறார். பின் ஏதோ பிரச்சினைகளால் இவர்கள் இருவரும் பிரிகிறார்கள். பிறகு ரஜினிகாந்த் அவர்கள் இரண்டாவதாக மீனாவை திருமணம் செய்கிறார். இதற்கு நடுவில் ரஜினிக்கு எதிரியாகிறார் நடிகை குஷ்பூ. மேலும், ரஜினியை, குஷ்பூ பழி வாங்குகிறார். இது தான் குஷ்புவின் கதாபாத்திரம் என்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

மேலும், தலைவர் 168 படம் குறித்துப் பல கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் அவர்கள் ரஜினிகாந்தின் தங்கையாக நடிக்கிறார் என்றும் கூறுகிறார்கள். இந்த படம் மனைவியின் பழிவாங்கும் எண்ணம், அண்ணன்– தங்கை பாசம் என குடும்ப சென்டிமென்ட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர் 168 படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் தீபாவளிக்கு முன்னதாகவே ஆயுதபூஜை விடுமுறையில் வெளியாகும் என்று செய்திகள் பரவி வருகின்றன.

-விளம்பரம்-
Advertisement