-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

படத்தில் ஒரு காட்சியில் கூட வாரவில்லை என்றாலும் வாரிசு படத்தில் நடித்த குஷ்பூ பெற்ற சம்பளம் எவ்ளோ தெரியுமா ?

0
538
Kushboo

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில்நடித்து இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா போன்ற பலர் நடித்து இருக்கின்றனர். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். குடும்ப பின்னணி கொண்ட கதையாக உருவாகி இருக்கும் இந்த படம் முதல் நாளே நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் குஷ்பூ நடித்து இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், படத்தில் ஒரு காட்சியில் கூட குஷ்பூ இடம்பெற்றவில்லை. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசிய குஷ்பூ ‘வாரிசு படத்தைப் பற்றி ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் அந்த படத்தில் நடித்திருக்கிறேன் என்று யார் சொன்னார் எனக்கு சரத்குமார் மற்றும் பிரபு சேரை பார்க்கத்தான் வாரிசு படப்பிடிப்பிற்கு பக்கத்தில் என்னுடைய படப்பிடிப்பு நடந்தது அதனால் நான் சென்று இருந்தேன்.

வாரிசு படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று கூறி இருக்கிறார். ஆனால், ஏற்கனவே இந்த படம் வெளியாகும் முன்பு விஜய் மற்றும் ராஷ்மிகாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த குஷ்பூ ‘இந்த குடும்பத்தில் இணைவது மிக்க மகிழ்ச்சி. நான் சொல்வதற்கு முன்பாக படக்குழு அதிகார்ப்பூர்வமாக அறிவிப்பதற்காக காத்துகொண்டு இருந்தேன்’ என்று பதிவிட்டு இருந்தார் என்பதும் குறிப்படத்தக்கது.

-விளம்பரம்-

இந்த நிலையில் தான் வாரிசு படத்தின் எடிட்டர் பிரவின் கே எல் குஷ்பூ ஏன் நடிக்கவில்லை என்றதை பற்றி தெரிவித்திருந்தார்.அவர் கூறுகையில் `இதனை கேட்பதற்கு எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. குஷ்பூ மிகவும் அருமையாக நடித்திருந்தார், அதோடு அவருடைய கதாபாத்திரமும் நன்றாக இருந்தது. ஆனால் படத்தின் நீளம் கருதி குஷ்பூ நடித்த காட்சிகளை நீக்க வேண்டிய இந்த கடினமான முடிவை எடுத்தோம். குஷ்புவிடம் நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்கிறேன்.

-விளம்பரம்-

ஆனால், நீங்கள் மிகவும் அற்புதமாக நடித்திருந்தீர்கள் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில் Deleted காட்சிகள் ஒளிபரப்பாகும் போது கண்டிப்பாக குஷ்பூ நடித்த அணைத்து காட்சிகளையும் நீங்கள் பார்க்கலாம் என்று கூறியிருந்தார் வாரிசு பட எடிட்டர் பிரவின் கே எல். இந்த படத்தில் குஷ்பூ 17 நிமிடங்கள் நடித்ததாக கூறப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் குஷ்பூவின் சம்பளம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் நடிக்க குஷ்பூவிற்கு 40 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news