மை ஆட்டோகிராப் பற்றி நடிகர் கிச்சா சுதீப் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் சேரன். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் பல படங்களை இயக்கியும், நடித்தும் இருந்தார். அதோடு சேரன் இயக்கிய பல படங்கள் தேசிய விருதுகளை வாங்கி இருந்தது. அதிலும் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டு இருந்தது.

நீண்ட இடைவெளிக்கு பின் ஆட்டோகிராப் படத்தை ரீ-ரிலீஸ் செய்வதாக சேரன் கூறி இருந்தார். அதில் 2கே கிட்ஸ்களை கவர் பண்ணுவதற்காக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இருப்பதாக அறிவித்து இருந்தார். நவம்பர் 14ஆம் தேதி இந்த படம் திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. கடந்த வாரம் தான் ஆட்டோகிராப் ரீயூனியன் என்ற பெயரில் ஒரு நிகழ்வை படக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் படத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் பற்றி எல்லாம் பகிர்ந்து இருந்தார்கள்.
கிச்சா சுதீப் பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தை கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப் இயக்கி நடித்திருக்கிறார். இது தொடர்பாக அளித்த பேட்டியில் கிச்சா சுதீப், சென்னையில் ஏவிஎம் ஸ்டுடியோவில் ஒரு படப்பிடிப்புக்காக ஓட்டலில் 30 நாள் தங்கி இருந்தேன். பக்கத்திலேயே ஒரு தியேட்டரில் ஆட்டோகிராப் படம் ஓடிக் கொண்டிருந்தது. ரூமில் டிவி போட்டாலுமே ஞாபகம் வருதே என்ற பாட்டு அடிக்கடி போட்டுக் கொண்டிருந்தார்கள். சரி என்று அந்த படத்தை போய் நான் தியேட்டரில் பார்த்தேன். படம் ரொம்ப சூப்பரா இருந்தது. பின் இந்த படத்தை கன்னடத்தில் எடுக்கலாம் என்று முடிவு சேரன் சாரிடம் கேட்டேன். அவர், இதுவரை யாருமே கேட்கவில்லை. எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். பின் நான் ஒரு இயக்குனரை வைத்து அந்த படத்தை எடுக்க ஆரம்பித்தேன்.
https://www.youtube.com/shorts/WK4BNy--bfc
ஆட்டோகிராப் படம்:
படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. அந்த இயக்குனர் படத்தில் சில மாற்றங்களை எல்லாம் செய்கிறோம் என்று சொன்னார். ஒரு இயக்குனர் எடுத்த படத்தை மாற்றுவது என்பது அவரை அசிங்கப்படுத்துவதற்கு சமம். அதையெல்லாம் மாற்ற தேவையில்லை என்று சொன்னேன். பின் சின்ன சின்ன கருத்து வேறுபாடு எனக்கும் அந்த இயக்குனருக்கும் ஏற்பட்டது. பின் அந்த படத்தை நானே இயக்கி வெளியிட்டேன். அதுதான் என்னை இயக்குனராக ஆக்கிய படம் என்று கூறி இருக்கிறார்.

மை ஆட்டோகிராப் படம்:
மேலும், கடந்த 2006 ஆம் ஆண்டு கன்னட மொழியில் மை ஆட்டோகிராப் என்ற பெயரில் கிச்சா சுதீப் இயக்கி தயாரித்து நடித்திருந்தார். இந்த படத்தில் மீனா, ஸ்ரீதேவிகா, தீபு, ரக்ஷ்மி உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. அதோடு ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு சேரன் மீண்டும் இயக்கத்தில் இறங்கி இருக்கிறார். இவர் கன்னட நடிகர் கிச்சா சுதிப்பை வைத்து தான் புதிய படத்தை இயக்கி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சேரன் இயக்கத்தில் படம் வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.






