டூரிஸ்ட் பேமிலி படத்தை பாராட்டி பான் இந்திய நடிகர் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் இயக்கத்தில் முதலில் வெளிவந்த ‘சுப்பிரமணியபுரம்’ படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இவர் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ‘ஈசன்’ என்ற படத்தை எடுத்திருந்தார். அதற்குப் பிறகு இவர் நடிகராக மட்டும் தான் நடித்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு சசி குமார் நடிப்பில் வெளியாகி இருந்த ‘நந்தன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலர் பாராட்டி இருந்தார்கள்.
டூரிஸ்ட் பேமிலி படம்:
இதைத்தொடர்ந்து சமீபத்தில் சசிகுமார் அவர்கள் டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக், குமரவேல், மீதுன் ஜெய்சங்கர், கமலேஷ் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருக்கிறார். இலங்கை தமிழர் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தின் வசூல்:
இந்த படத்தை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே பாராட்டி இருக்கிறார்கள். இதுவரை உலகம் முழுவதும் இந்த படம் 75 கோடி வசூல் செய்தது. இதை படத்தினுடைய தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். தற்போது ‘டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் டூரிஸ்ட் பேமிலி படத்தை பாராட்டி கன்னட நடிகர் சுதீப் போட்டிருக்கும் பதிவுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், டூரிஸ்ட் பேமிலி படத்தை பார்த்தேன்.
One of the finest writing and execution in recent times.#TouristFamily surely is a landmark story telling which kept me glued to my seat. Each character has it's own moments and space,,and every character flawlessly portrayed by actors. Fantabulous casting.
— Kichcha Sudeepa (@KicchaSudeep) June 7, 2025
Music is another…
கிச்சா சுதீப் சொன்னது:
சமீப காலத்தில் நான் பார்த்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. இது சொல்லியே ஆக வேண்டும். படத்தில் வெளிப்படும் மென்மையான உணர்வுகள், அழகான கதை எல்லாவற்றிற்கும் மேலாக இது மாதிரியான ஒரு நுட்பமான விஷயத்தை தெரிந்தே கொண்டு வர இயக்குனர் காட்டிய துணிச்சல் உண்மையிலேயே பாராட்டு கூறியது. படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகரின் நடிப்பும் அற்புதமாக இருந்தது. இசை மற்றும் ஒளிப்பதிவு படத்தின் ஆன்மாவை பிடித்து வைத்திருக்கிறது. முழு படக்குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், நீங்கள் அருமையான வேலை செய்துள்ளீர்கள் என்று கூறியிருக்கிறார்.

படத்தின் கதை:
படத்தில் சசிகுமார் தன்னுடைய மனைவி சிம்ரன் மற்றும் இரண்டுமகன்களுடன் இலங்கையில் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார். இதனால் இவர் இலங்கையில் இருந்து சட்டத்துக்கு புறம்பாக இந்தியா வருகிறார். ராமேஸ்வரம் வந்த இவரை சிம்ரன் அண்ணன் யோகி பாபு தான் சென்னைக்கு அழைத்து வந்து கேசவ நகரில் குடி வைக்கிறார். இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்ற அடையாளத்தையே மறைத்து சசிகுமார் குடும்பம் வாழ்கிறார்கள். இன்னொரு பக்கம் ராமேஸ்வரத்தில் நிகழும் ஒரு குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் போலீஸ் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் சசிகுமார் குடும்பம் சிக்குகிறது. இந்த சவால்களில் இருந்து சசிகுமார் தன்னுடைய குடும்பத்தை எப்படி காப்பாற்றினார்? அதனால் என்னென்ன பிரச்சனை வருகிறது? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.






