தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சந்தானம். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கிக். இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கிருக்கிறார். இந்த படத்தில் டான்யா, கோவை சரளா, செந்தில், தம்பி ராமையா, பிரம்மாண்டம், வையாபுரி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை நவீன் ராஜ் தயாரித்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

இரண்டு விளம்பர ஏஜென்சிகளுக்குள் நடக்கும் போட்டி தான் கிக் படத்தின் ஓன்லைன் கதை. படத்தில் ஹீரோ சந்தானம் விளம்பர ஏஜென்சி ஒன்றில் வேலை செய்து கொண்டிருக்கிறார். இவர் விளம்பர ஆர்டர்களை வாங்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார். அந்த அளவிற்கு மோசமான ஒரு ஆளாக இருக்கிறார். இன்னொரு பக்கம் நியாயம், நீதி, நேர்மை என்று கதாநாயகி டான்யா இருக்கிறார். இவர் மனோபாலாவின் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

Advertisement

இப்படி இருக்கும் நிலையில் ஒருநாள் கார் விளம்பரம் ஒன்றிற்காக அதன் மார்க்கெட்டிங் ஹெட் செந்திலுக்கு ஐட்டம் டான்ஸ் பாடல் ஒன்றை ரெடி பண்ணி அனுப்புகிறார் சந்தானம். அந்த பாடலுக்கு ஆடிய பெண் சண்டைக்கு வருகிறார். பின் அதை வைத்தே போலியாக சந்தானம் விளம்பரம் தயாரிக்கிறார். இதனால் பல பிரச்சனைகள் நடக்கிறது. அதற்குப் பிறகு என்ன ஆனது தான் படத்தின் மீதி கதையாக இயக்குனர் சொல்லி இருக்கிறார்.

படம் குறித்த விமர்சனம்:

படத்தில் ஒரு விளம்பர பிரச்சினையை வைத்து இரண்டு மணி நேரம் கதையை இயக்குனர் ஓட்டி இருக்கிறார். இது ரொம்பவே பார்வையாளர்களை சோதித்து இருக்கிறார் என்று சொல்லலாம். படத்தில் வரும் காமெடிகள் எல்லாம் கோபம் வரும் அளவிற்கு இருக்கிறது. வழக்கம்போல் சந்தானம் தன்னுடைய ஜாலியான கவுண்டர்களை இந்த படத்திலும் போட்டு இருக்கிறார். ஆனால், தம்பி ராமையா காமெடி செட் ஆகவில்லை. இவரை அடுத்து கதாநாயகியாக வரும் டான்யா நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

Advertisement

மனோபாலாவின் தங்கையாக வரும் கோவை சரளா வழக்கம்போல் வித்தியாசமாக செய்கிறேன் என்று அவருடைய மாடுலேஷன் பார்வையாளர்கள் மத்தியில் கடுப்பை ஏற்றி இருக்கிறது. விளம்பர ஆர்டர்களை பிடிக்க சந்தானம் செய்யும் வேலைகள் ரசிக்க வைத்தாலும் சில இடங்களில் கோபம் தான் வர வைத்திருக்கிறது. அதிலும் பிளாஷ் பேக் என்று சொல்லி வரும் காட்சிகள் எல்லாம் பார்வையாளர்கள் மத்தியில் சளிப்படையை வைத்திருக்கிறது.

Advertisement

ஒரு சாதாரண எளிமையான கதையை இயக்குனர் கையாண்டிருப்பது படத்திற்கு பெரிய மைனஸ். இயக்குனர் நடிகர்கள் தேர்விலும், கதைக்களத்திலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்திருக்கலாம். எப்படா பட முடியும் என்று பார்வையாளர்கள் மத்தியில் தோன்றும் அளவிற்கு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் ஒரே ஆறுதல் என்றால் படத்தின் பின்னணி இசையும் ஒளிப்பதிவு தான். அதோடு படத்தில் சந்தானம் சொல்லும் சில வாழ்க்கை தத்துவம் நன்றாக இருக்கிறது. ஆக மொத்தம் டிடி ரிட்டர்ன்ஸ் படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில் கிக் படம் சந்தானத்திற்கு தோல்வியை தான் கொடுத்திருக்கிறது.

நிறை:

சந்தானம் காமெடி

பின்னணி இசை ஒளிப்பதிவு

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றுமே இல்லை

குறை:

இயக்குனர் கதைக்களத்தில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்

நிறைய தேவை இல்லாத காட்சிகள்

படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை பார்வையாளர்களை ரொம்பவே சோதித்து இருக்கிறது

தம்பி ராமையா காமெடி செட்டாகவில்லை

மொத்தத்தில் கிக்- தோல்வி

Advertisement