கிங்ஸ் ஆப் டான்ஸ் புகழ் பைக் விபத்தில் மரணம்..! சோகத்தில் மூழ்கிய விஜய் டிவி..! புகைப்படம் உள்ளே !

0
1867
kings of dance hari
- Advertisement -

சமீப காலமாக பிரபலங்களின் விபத்துக்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றது. சில நாட்களுக்கு முன்னர் கேரளாவை சேர்ந்த பெண் செய்தி வாசிப்பாளனி ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.தற்போது விஜய் டிவியில் பிரபலர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

kings-of-dance-fame-hari

விஜய் டிவியில் ஒளிபரப்பான கிங்ஸ் அப் காமெடி என்ற நடன நிகழ்ச்சியில் பங்குபெற்றவர் ஹரி. அந்த நிகழ்ச்சியில் சிறப்பான தனது நடனத் திறமையால் அணைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும், அந்த நிகழ்ச்சியில் பல முறை நடுவர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

- Advertisement -

ஹரி, கடந்த புதன் கிழமை (மே 9 ) அன்று சென்னையில் உள்ள கதீட்ரல் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை கேட்டு ஹரியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹரியின் மறைவிற்கு பல்வேறு பிரபலங்களும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Hari-kings-of-dance

இந்த செய்தியை அறிந்த விஜய் டிவியின் பிரபல பெண் தொகுப்பாளினி பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்தை தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டிருந்த பதிவில்”என்னால் இன்னும் இந்த செய்தியை நம்ப முடியவில்லை. ஹரி இவ்வளவு விரைவில் நம்மை விட்டுச் சென்றுவிட்டார்.” என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Advertisement