இம்மாதம் வெளியாக இருக்கும் கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக், யார் நடிச்சி இருக்காங்க பாருங்க ? (பிகினி ட்ரெஸ்ல நடிக்கமா இருந்தா சரி)

0
626
kolamavu
- Advertisement -

நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் சமீபகாலமாக நயன்தாரா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஜாக்லின் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். படத்தில் நயன்தாரா அவர்கள் கோகிலா என்ற பெயரில் நடித்து இருக்கிறார். இவர் ஒரு நடுத்தரமான குடும்பத்தை சேர்ந்தவர். தினம் வேலைக்கு போனதான் குடும்பம் நகரும்.

- Advertisement -

கோலமாவு கோகிலா படத்தின் கதை:

அப்படி ஒரு நிலைமையில் அவங்க அம்மாவுக்கு கேன்சர் வருது. அப்போ hospital செலவுக்கு நிறைய பணம் தேவைப்படுது. ஒரு போதை பொருள் கடத்துற கும்பல் கிட்ட நயன் மாட்டிக்குறாங்க. அந்த கும்பலும் நயன்தாரா பாக்குறதுக்கு அப்பாவி மாதிரி இருக்குறதால் அவர்களை வைத்து கடத்தல் பண்ணுறாங்க. அப்புறம் இந்த விஷயம் பெரிய பிரச்சனைல போய் நிக்குது . இந்த பிரச்சனையா அவங்க எப்படி சமாளிக்கிறாங்கா? அவங்க அம்மாவ எப்படி கேன்சரில் இருந்து காப்பாத்துறாங்க? என்பது தான் படத்தின் கதை.

கோலமாவு கோகிலா இந்தியில் ரீமேக்:

மேலும், திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை இந்தியில் சித்தார்த் சென் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்து இருக்கிறார். “குட் லக் ஜெர்ரி” என்ற பெயரில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை லைகா புரோடக்சன் நிறுவனத்துடன் இணைந்து ஆனந்த் எல் ராயின் கலர் எல்லோ புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

படம் ரிலீஸ் தேதி:

மேலும், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த படம் ஜூலை 29ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என்று படக்குழு அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அதற்கான போஸ்டர்களும் அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறார்கள். மேலும், தமிழில் கோலமாவு கோகிலா ஹிட்டானதை தொடர்ந்து இந்தியில் இப்படம் ஹிட் ஆகுமா? இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Jhanvi Kapoor Rejected Vijay Devarakonda's Upcoming Film Fighter

ஜான்வி கபூர் குறித்த தகவல்:

பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஜான்வி கபூர். இந்திய நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவி- தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் தான் ஜான்வி கபூர். இவர் ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் நெட்ஃப்ளிக்ஸ் படத்திலும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement