சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் திருச்செல்வம். இவர் ஆரம்பத்தில் டப்பிங் தியேட்டரிலும், இளையராஜா மியூசிக் கம்போஸ் செய்யும் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்து இருந்தார். பின் இவர் தமிழ், மலையாளம், இந்தி என்று பல மொழிகளில் தயாரான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றினார்.அதற்குப் பிறகு தான் இவர் சின்னத்திரையில் சீரியல்களை இயக்கும் பணியில் இறங்கினார்.
இவர் முதன் முதலாக 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த மெட்டி ஒலி என்ற தொடரில் இணை இயக்குனராக பணியாற்றினார். அந்த தொடரில் மூலம் திருச்செல்வம் நடிகராகவும் அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் கோலங்கள் என்ற தொடரை இயக்கி சின்னத்திரை இயக்குனராக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார். இந்த தொடர் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து இவர் அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களை திருச்செல்வம் இயக்கி இருக்கிறார்.
திருச்செல்வம் சீரியல்கள்:
இப்படி திருச்செல்வம் இயக்கிய சீரியல்கள் எல்லாம் இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அதற்கு காரணம் இவர் இயக்கும் சீரியல் எல்லாம் பெண்களின் வாழ்வை மையமாக கொண்ட கதையாக அமைந்திருக்கும். மேலும், திருச்செல்வம் இயக்கிய தொடர்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்ற தொடர்களில் ஒன்று தான் கோலங்கள். இது தொடர் 2003 ஆம் ஆண்டு தொடங்கி 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. மொத்தம் இந்த தொடர் 1533 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக முடிவடைந்தது.
நடிகை சத்யபிரியா :
இந்நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை சத்யபிரியா. நடிகை சத்யப்ரியா 1954ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 300க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் 50 படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் சத்யப்ரியா.1975ஆம் ஆண்டு மஞ்சள் நிற முகமே என்ற தமிழ் படத்தில் விஜய்குமாருக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார் சத்யப்ரியா.
நடித்த படங்கள் :
அதன்பின்னர் தீபம், சக்ராயுதம், மனிதரில் இத்தனை நிறங்களா, புதிய பாதை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் குறைந்த பின்னர் அம்மா கேரக்டரிலும், வில்லி கேரக்டரில் நடிக்க துவங்கினார் சத்யபிரியா. அஞ்சலி, எதிர் காற்று, அக்னி பார்வை, ரோஜா, மேட்டுப்பட்டி மிராசு, லேசா லேசா, மாயி, காதலுடன், பகவதி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் சத்யப்ரியா.
சீரியலில் காமிறங்கிய சத்யபிரியா :
படங்களில் வாய்ப்புகள் குறைந்த்து அடுத்து தொடர்த்து சீரியலில் களமிறங்கினார். இது வரையில் இவர் பல சீரியலில்களில் நடித்து விட்டார் அதில் முக்கியமான சீரியல் என்றால் அது இயக்குனர் திருச்செலவம் இயக்கிய கோலங்கள் தான். இது இவருக்கும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேறப்பை கொடுத்தது. அதனை தொடர்ந்து தற்போது திருச்செல்வம் இயக்கிவரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார்.
கோலங்கள் மற்றும் எதிர்நீச்சல் சந்திப்பு :
இந்த நிலையில்தான் இவர் தன்னுடைய பிறந்த நாளை கடந்த மார்ச் 4ஆம் தேதி கொண்டாடினார். இவரது பிறந்த்நாள் கொண்டாட்டத்தில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இதில் ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால் கோலங்கள் சீரியல் கதாநாயகி தேவயானி, நளினி உள்ளிட்டோரும் இவர்களுடன் கலந்து கொண்டு நடிகை சத்யபிரதாவின் பிறந்தநாளை கொண்டாடினார்கள். இந்த சந்திப்பில் கோலங்கள் நாயகன் மிஸ் ஆகி இருக்கிறார்.
=