டாக்டர், தேசிய விளையாட்டு, துணை ஆட்சியர் – சினிமாவே வேண்டாம் என்று சாதித்த தமிழ் சினிமா பிரபலங்களின் வாரிசுகள்.

0
152
- Advertisement -

பொதுவாகவே சினிமா உலகில் பிரபல நடிகர்கள் தங்களுடைய வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்துவது வழக்கம் தான். சிவாஜி கணேசன் காலம் தொடங்கி விக்ரம் மகன் வரை என பல நடிகர்களும் தங்களுடைய பிள்ளைகளை சினிமாவில் நடிக்க வைக்கிறார்கள். ஆனால், அதே சமயம் பல பிரபலங்கள் தங்களுடைய வாரிசுகளை சினிமா வேண்டாம் என்று வேற துறைகளிலும் சாதிக்க வைத்திருக்கிறார்கள். அந்த பிரபலங்களின் பட்டியலை தான் இங்கு பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-

ஜெய்சங்கர் :

தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கபட்டவர் பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர். எம் ஜி ஆர், சிவாஜி இருந்த காலகட்டத்திலேயே தனக்கென்று ஒரு தனி பாதையை உருவாக்கி கொண்டு தனக்கென்ற பாதையில் சினிமாவில் வலம் வந்தவர் ஜெய்சங்கர். இவர் 1965- இல் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். அதோடு அந்த காலத்திலேயே ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு நிகரான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் நடித்த நடிகரும் இவர் தான்.

- Advertisement -

இவரை மக்கள் கலைஞர் என்றுதான் அழைத்தார்கள். மேலும், இவருடைய மகன் விஜய் சங்கர். இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தும் அதை வேண்டாம் என்று மறுத்துவிட்டு தற்போது சென்னையில் சிறந்த கண் மருத்துவராக இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவருடைய மனைவியும் சிறந்த கண் மருத்துவர். இவர்கள் வருடம் வருடம் பல ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளித்தும் வருகிறார்கள்.

சின்னி ஜெயந்த்:

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்தவர் சின்னி ஜெயந்த். இவர் நகைச்சுவை நடிகர் மட்டும் இல்லாமல் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் சின்னத்திரை தொடர்களிலும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார். தற்போது சினிமா வாய்ப்பு குறைவு காரணமாக தான் அதிகம் இவரை படங்களில் பார்க்க முடியவில்லை. இவருடைய மகன் சுதன் ஜெய் நாராயணன். இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தும் அதை தவிர்த்து தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்தினார். தற்போது இவர் திருப்பூர் நகர் சப் கலெக்டராக பணியாற்றி வருகிறார். இந்திய அளவில் நடந்த யுபிஎஸ் தேர்வில் இவர் 75 வது இடம் பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

தலைவாசல் விஜய்:

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான வில்லனாக நடித்தவர் தலைவாசல் விஜய். இவர் வில்லன் கதாபாத்திரத்தில் மட்டுமில்லாமல் காமெடி, குணச்சித்திர இடங்களிலும் நடித்திருக்கிறார். பல வருடமாக தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டு வருகிறார். அதோடு இவர் சின்னத்திரை சீரியலில் நடித்திருக்கிறார். தற்போது இவர் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவருடைய மகள் ஜெயவீனா. இவர் மிகச்சிறந்த நீச்சல் வீராங்கனை. பல தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு இவர் பல பதக்கங்களையும் வென்று இருக்கிறார்.

மாதவன்:

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக அறிமுகமானவர் மாதவன். தற்போது இந்திய திரை உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. சமீப காலமாக இவர் கதைக்கலங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவருடைய மகன் வேதாந்த். இவர் மிகச்சிறந்த நீச்சல் வீரர். இந்த ஆண்டு நடைபெற்ற நீச்சல் போட்டியில் இவர் ஐந்து தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி பதக்கங்களை வாங்கி பெருமை சேர்த்திருக்கிறார்.

Advertisement