தனது உடையை மகளுக்கும், மகளின் பாவாடை சட்டையை தனுக்கும் போட்டு கொட்டாச்சி வெளியிட்ட Fun வீடியோ.

0
8222
kotachi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கொட்டாச்சி. வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் படத்தில் இணைந்து கலக்கிய கொட்டாச்சியை சமீப காலமாகவே படத்தில் காண முடியவில்லை. இவர் சினிமா உலகில் தன்னை சிறந்த காமெடியனாக நிலைநிறுத்திக் கொள்ள பல போராட்டங்களை செய்து வருகிறார். இந்நிலையில் இவருடைய மகள் மானஸ்வி குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆகி விட்டார்.

-விளம்பரம்-
View this post on Instagram

⭐?⭐

A post shared by Manasvi (@manasvi01) on

கடந்த ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வந்து சூப்பர் ஹிட் கொடுத்த இமைக்காநொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக மானஸ்வி நடித்து இருந்தார். இந்த படத்தில் மானஸ்வி நடிப்பு பாராட்டக்கூடிய வகையில் இருந்தது. இதனாலே இந்த படத்தின் மூலம் மானஸ்வி விரைவாக மக்கள் மத்தியில் பிரபலமானார். பிறகு இருட்டு போன்று பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார்.

- Advertisement -

மேலும்,இந்த வருடம் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார் படத்தில் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி நடித்து இருந்தார்.அதே போல கொட்டாச்சி மகள் மானஸ்வி மலையாளத்தில் மை சாண்டா என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்ததற்கு இவருக்கு சமீபத்தில் இந்த ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திர விருது மானஸ்விக்கு கிடைத்துஇருந்தது .

View this post on Instagram

Lovely Daddy ??

A post shared by Manasvi (@manasvi01) on

இந்த விருதை தன் தந்தை கொட்டாச்சி உடன் சென்று வாங்கிஇருந்தார் மானஸ்வி. சமூக வலைதளத்தில் அடிக்கடி தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோகளையும் பதிவிடும் கொட்டாச்சி. சமீபத்தில் தனது உடையை தனது மகளுக்கும் மகள் உடையை தானும் போட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement