சர்ச்சுக்கு போன் செய்து வந்து ஜெபம் செய்யுங்கனு சொன்னேன் – கோவை குணா இறுதி நிமிடம் குறித்து அவரின் மனைவி.

0
553
Guna
- Advertisement -

சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் முதல் டைட்டில் வின்னர் என்ற பெருமையை பெற்ற கோவை குணா நேற்று உடல் நாலக்குறைவால் காலமாகி இருக்கிறார். கோவை குணாவிற்கு சிறுநீரக பிரச்சனை இருந்தது கடந்த மூன்று வருடங்களாகவே அவர் அதற்காக டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். பல ஆண்டுகளாகவே அவருக்கு உடல் நிலை படு மோசமாக ஆகி இருந்தது. மேலும், குணாவிற்கு அதிகப்படியான குடிபி பழக்கம் இருந்ததால் தான் இப்படி ஆகிவிட்டது என்று அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்த மதன் பாப் தெரிவித்து இருந்தார்.

-விளம்பரம்-
kovaiguna

இப்படி ஒரு நிலையில் குணாவின் இறப்பு குறித்து அவரது மனைவி பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள அவர் ‘அவரது மனைவிஅவருக்கு சில நாட்களாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டது அதற்கு தான் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தோம். ஒரு வாரமாக அவருக்கு வயிற்றுப்போக்கு நிற்கவேயில்லை. அதற்குத்தான் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். அங்க மருந்துகளை சாப்பிட்டு பின்வரும் அவருக்கு குணமாகவில்லை.

- Advertisement -

மேலும் அவரது ரத்தத்தை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பியிருந்தார்கள். அதனுடைய பரிசோதனை முடிவுகள் தற்போது வரை கூட வரவில்லை. வயிற்றுப்போக்குக்கு அவர் மருந்து மாத்திரை சாப்பிட்டு சாப்பிட்டு ஒரு நாள் அவரால் முடியவில்லை. அப்போதே எனக்கு தெரிந்து விட்டது ஏதோ ஆகப் போகிறது என்று. உடனே நான் சர்ச்சுக்கு போன் செய்து வந்து ஜெபம் செய்யுங்கள் என்று சொன்னேன். அவர்களும் வந்து ஜெபம் செய்தார்கள்.

ஆனால், சிறிது நேரத்திலேயே வலி மிகவும் அதிகமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் இடமும் சொன்னார். அவர்களும் எல்லா மருந்துகளையும் கொடுத்தார்கள். ஆனால், அவருக்கு குணமாகவில்லை நான் தான் அவரை மடியில் வைத்து நீவி விட்டு கொண்டிருந்தேன். பின்னர் என்னுடைய மகள் வந்ததும் அவரது மடியில் அவர் படுத்துக்கொண்டார். அதன் பின்னர் அவர் வாந்தி எடுத்தார்.

-விளம்பரம்-

உடனே மருத்துவர்கள் அழைத்து பார்த்தபோது எல்லாமே முடிந்து விட்டது கர்த்தருடைய கிருபையின் இத்தனை ஆண்டுகள் அவர் இருந்தது பெரிய அதிசயம் தான்’ என்று கூறியுள்ளார். குணாவின் உடல் கோவை விளாங்குருச்சி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில், அஞ்சலிக்காக வைக்கபட்டது. அவரது இறப்பிற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள், நகைச்சுவை நடிகர்கள் பல குரல் கலைஞர்கள் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும், அவருடன் பணியாற்றிய பல்வேரு பிரபலங்கள் குணாவின் இறப்பிற்கு சமூக வலைதளத்தில் தங்களது இரங்கலை தெரிவித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இன்று மாலை குணாவின் உடல் ஆம்புலன்சில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கவுண்டம்பாளையத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது மேடை கலைஞர்கள் பாட்டு பாடி – கைதட்டி கண்ணீருடன் இறுதி மரியாதை செலுத்தினர்.

Advertisement