அந்த காரணத்தினால் தான் திருமணமே பண்ணிக்கல – முதன் முறையாக மனம் திறந்த கோவை சரளா

0
139
- Advertisement -

தமிழ் சினிமாவில் பெண் காமெடியன் நடிகைகளில் ஆட்சி மனோரமாவுக்கு அடுத்தபடியாக சாதித்து காட்டியவர் கோவை சரளா,அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்ரில் திருமணம் செய்துகொள்ளாத கரணம் குறித்து பேசி இருப்பது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற திரை உலகிலும் நகைச்சுவை நடிகையாக கலக்கிக் கொண்டிருந்த இவர் சில குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

கோயம்புத்தூரை சேர்ந்த இவர் தன்னுடைய பெயருடன் தனது ஊரின் பெயரையும் சேர்த்து “கோவை சரளா” ,என்பதை தன்னுடைய அடையாளமாக்கிக் கொண்டார். நடிப்பின் மீது தீராத காதல் கொண்டு படிக்கும் போதே சினிமா வாய்ப்பை தேடி அலைந்த இவருக்கு கே .ஆர் .விஜயாவின் “வெள்ளி ரத்தினம் “படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் படத்திலேயே தனது அபார நடிப்பை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

கோவை சரளாவின் திரைப்பயணம்:

இதனை தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், இயக்குனர் பாக்கியராஜ் இயக்கி நடித்த “முந்தானை முடிச்சு” திரைப்படத்தில் ‘அருக்காணி’ என்ற கதாபாத்திரத்தில் கர்ப்பிணி பெண்ணாக நடித்து கலக்கி இருப்பார். அதைத்தொடர்ந்து சின்ன வீடு, சதிலீலாவதி கரகாட்டக்காரன் ,காலம் மாறிப்போச்சு ,காஞ்சனா போன்ற சூப்பர் ஹிட் படங்களிலும் நடிப்பில் பிச்சி உதறி இருப்பார்.

Kovai Sarala

திருமண வாழ்க்கையில் ஈடுபடாதது பற்றி சரளா கூறியது:

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் திருமண வாழ்க்கையில் ஈடுபடாத காரணம் குறித்தும், அவரைப் பற்றி பரவி வரும் வதந்திகள் குறித்தும விளக்கம் அளித்துள்ளார். அதில், “பிறக்கும்போது தனியாக பிறப்பதைப் போல் இறக்கும்போதும் தனியாகத்தான்இறக்கிறோம். இடையில் எதற்கு இந்த தேவையில்லாத உறவுகள். வாழும்போது சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை”, என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்று, அவர்களின் பிள்ளைகளே ஒதுக்கி வைப்பதால் தனிமையில் தான் பலர் வாழ்ந்து வருகின்றனர்.எனவே, “யாரையும் சார்ந்து வாழ்வது எனக்கு பிடிக்காது”, என்றும் கூறியுள்ளார்.
எனக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன் என்றும் என்னுடைய குடும்பத்தினர் என்னை கைவிட்டு விட்டனர் என்றும் வதந்திகள் பரவி வருகின்றன .அவை எதுவுமே உண்மை இல்லை.

அரசியல் பற்றி பேசிய சரளா:

தன்னுடைய சகோதரிகள் தன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார் என்றும் கோவை சரளா கூறியுள்ளார். தான் அரசியலில் இறங்கப் போவதாக வரும் வதந்திகளை பற்றி கோவை சரளா கூறுகையில், “எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை அதனால் நான் அரசியலுக்கு வர மாட்டேன்” என்று விளக்கம் அளித்துள்ளார். 900 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் இன்றும் சுறுசுறுப்புடன் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதுடன் சின்னத்திரையிலும் சில நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

Advertisement