நான் ஒரு இடத்தை நினைக்கின்றேன் ! அந்த இடத்திற்கு விஜய் வருவார் – கோவைசரளா உறுதி!

0
1778
thalaiva-vijay

விஜயின் மெர்சல் படம் தற்போது சக்கை போடு போட்டுக்கொண்டடிருக்கும் வேலையில் தற்போது படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தாலும் நச்சென மக்கள் மனதில் பதிந்தவர் ‘கோவை சரளா’

இதற்கு முன்பு ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த சுமார் 40 படங்களில் நடித்துள்ள கோவை சரளா, நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்யுடன் இந்த படத்தில் நடித்துள்ளார். அதாவது கடந்த 1986ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘வசந்த ராகம்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்த படத்தில் கோவை சரளா நடித்தார். அதற்கு பின்னர் சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் விஜய்யின் ‘மெர்சலில் நடித்துள்ளார்.

இதனைப் பற்றி அவர் கூறியதாவது:
நான் அப்போது பார்த்த விஜய்க்கும் தற்போது பார்க்கும் விஜய்க்கும் நிறைய வித்யாசம் இருக்கிறது. தற்போது ரொம்ப மெச்சுராக இருக்கிறார் விஜய். விஜய் படங்களில் நிறைய சாதித்துவிட்டார். இதற்கு மேல் அவருக்கு ‘பொது வேலை’ ஒன்று இருக்கிறது. அதனை அவர் சிறப்பாக செய்து அடைய வேண்டும். ஒரு இடத்தை நினைத்து வைத்திருக்கிறேன். அந்த இடம் தான் அவருக்கு சரியான இடம். அந்த இடத்தை அவர அடைய வேண்டும் எனக் கூறியுள்ளார் கோவைசரளா.

கோவை சரளா விஜயின் அரசியல் வருககையைப் பற்றி தான் சூசகமாகபேசுகிறார் என்று சற்று தெளிவாகவே தெரிகிறது.