கோவை சரளா திருமணம் செய்யாத காரணம் பற்றிய தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை ராணி ஆட்சி மனோரமாவுக்கு பிறகு காமெடி இளவரசியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் கோவை சரளா. இவர் தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு பிரபலமான நகைச்சுவை நடிகையாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

பெரும்பாலும் இவர் படங்களில் குண சித்திர கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் இதுவரை 800 படங்களுக்கு மேல் நடித்துவிட்டவர். இன்றும் ஓர் இளம் நடிகை போல உற்சாகம் குறையாமல் வளம் வருகிறார்.
கோவை சரளா குறித்த தகவல்:
1979 தொடங்கி தற்போது வரை இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் இவரின் நகைச்சுவை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் என்று சொல்லலாம். இவர் சினிமா துறையில் பல சாதனைகளை செய்திருக்கிறார். தற்போதும் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டுதான் வருகிறார். கடந்த சில வருடங்களாகவே நடிகை கோவை சரளா ஆன்மீகத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கோவை சரளா பேட்டி:
பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று அந்த கோயிலின் சிறப்பு அம்சங்களை பேசி வீடியோ பதிவிட்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, நடிகை கோவை சரளாவுக்கு 63 வயதாகி இருக்கிறது. இருந்துமே இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இது குறித்து பலருமே கேள்வியும் எழுதி இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் கோவை சரளா, எனக்கு கல்யாணம் ஆகவில்லை என்று நான் ஒருபோதுமே கவலைப்பட்டது கிடையாது.

திருமணம் பற்றி சொன்னது:
இப்ப கல்யாணம் பண்ணியவர்களை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறேன். நான் சொன்னா கேட்கவில்லையே என்பேன். கல்யாணம் பண்ணிவிட்டால் மட்டும் கடைசிவரை புருஷன் கூடவே வரப்போவது கிடையாது. அவர் ஓடி போறாரோ, இல்லையோ செத்துப் போறாரோ, எப்படியும் ஒரு நாள் போகத்தான் போறார். கடைசியில் நாம் தனியாகத்தான் இருக்கப் போகிறோம். எனக்கு கல்யாணத்தில் சுத்தமாகவே விருப்பம் கிடையாது என்று கூறியிருக்கிறார்.






