பெர்போர்ம் பண்ணும் போது சூட டீய மேல ஊத்தனாங்க – கண்ணீர் விட்டு கூறிய Kpy பாலா.

0
3364
kpybala
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு காமெடி நடிகர்கள் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த தீனா சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி இருந்த கைதி படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது மாஸ்டர் படத்தில் கூட நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
KPY Bala Biography: Unknown Facts About Cooku With Comali and KPY Star Bala  Revealed! How Did Bala Join KPY and Vijay TV? - TheNewsCrunch

தீனாவை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் காமெடியில் கலக்கி வருவது புகழ் மற்றும் பாலா தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. இவரை அனைவரும் வெட்டுக்கிளி என்று தான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்றார் பாலா.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு வாரமும் பாலா செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லை. அதுவும் ரம்யா பாண்டியனை வைத்து பாலாவும், புகழும் பண்ண காமெடிகளால் தான் இந்த சமையல் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமானது என்று சொல்லலாம். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜூங்கா படத்தில் கூட நடித்து இருக்கிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் காமெடியில் அசத்தி வரும் பாலா, விஜய் தொலைக்காட்சியில் நாளை துவங்க இருக்கும் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று வெளியானது. அதில் பாலா பேசுகையில் ”எங்களை மாதிரி பசங்க எல்லாம் எடுத்த உடனே மேல வந்திற முடியாது. பெர்பார்ம பண்ணும் போது சுட சுட டீயெல்லாம் எடுத்து மேல ஊத்தி இருக்காங்கஎன்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதை கேட்டு பலரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

-விளம்பரம்-
Advertisement