மற்றவர்களின் கருப்பு பணத்தை மாற்ற இப்படியெல்லாம் உதவி செய்கிறேனா? பாலா அளித்த பதில்.

0
480
- Advertisement -

தன்னை குறித்த விமர்சனத்திற்கு கே பி ஒய் பாலா கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. இவரை அனைவரும் வெட்டுக்கிளி என்று தான் அழைப்பார்கள். அந்த பெயர் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இவர் சாதாரண நபராகத்தான் விஜய் டிவியில் நுழைந்தார்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் காமெடி செய்து வந்த இவர் மற்றவர்கள் கொடுக்கும் கவுண்ட்டருக்கு உடனடியாக பதில் கவுண்ட்டர் கொடுத்து விடுவார். அதற்க்காக இவர் இரவு பகலாக தன்னை தானே தயார் படுத்திக் கொண்டு இருந்தார். அந்த வகையில் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சி சமையலை மையப்படுத்தி இருந்தாலும் அதிலும் செய்யும் காமெடிகள் தான் அந்த நிகழ்ச்சியை இந்த அளவிற்கு வளர்த்து விட்டது.

- Advertisement -

KPY பாலா:

மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட KPY பாலா செய்யும் காமெடிகளுக்கு அளவே கிடையாது. தற்போது தான் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. ஆனால், கடந்த 4 சீசனில் பாலாவால் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்கு காரணம், இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் விஜய் சேதுபதியின் புலிக்குட்டி பாண்டி, யோகி பாபு நடித்த Shoe, பாண்டி, விமர்சகரான ப்ளூ சட்டை மாறனின் ஆண்டி இந்தியன், நாய் சேகர் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

பாலா குறித்த தகவல்:

அதோடு இவர் பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார். மேலும், பாலா அவர்கள் நடிகர் மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்ட நபரும் ஆவார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள சிறியவர்களை படிக்க வைப்பதுடன், ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். அதை தொடர்ந்து இவர் மலைவாழ் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி தந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

சமூக சேவை செய்யும் பாலா:

பாலாவின் இந்த நல்ல மனசை பார்த்து பலருமே பாராட்டி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஆண்டிபட்டியில் நடந்த பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பாலா கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் பாலா பிரபலங்களின் குரல்களில் மிமிக்கிரி செய்தும் நகைச்சுவை செய்தும் நடனமாடி இருந்தார். இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாலா, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி பகுதி எனக்கு ரொம்ப பிடித்த இடம். எல்லோரும் சொல்வது போல் நான் பெரிய ஆள் எல்லாம் கிடையாது. என்னால் முடிந்ததை பிறருக்கு செய்து கொண்டிருக்கிறேன். யாராக இருந்தாலும் அரசியலுக்கு வந்தால் நல்லது தான் செய்வார்கள்.

பாலா அளித்த பேட்டி:

மற்றவர்களைப் பற்றி சொல்வதற்கு எனக்கு தகுதி இல்லை. ஒரு சாதாரண மனிதன். நடிகர் விஜய் மிகப்பெரிய ஆள். அதே போல் சிலர் எனக்கு பின்னால் ஆட்கள் இருப்பதாக சொல்கிறார்கள். எனக்கு பின்னால் எந்த ஆளும் இல்லை. என் பின்னால் இருப்பது கஷ்டம், வெட்கம், அடி, வலி, வேதனை தான். எனக்கு தோள் கொடுப்பது நடிகர் லாரன்ஸ் அண்ணா தான். கருப்பு பணத்தை தான் வெள்ளை பணமாக மாற்ற இப்படி செய்கிறேன் என்று கூறுகிறார்கள். நான் அப்படியெல்லாம் மாற்றவில்லை. வெயிலில் நின்று நான் கருத்த பணத்தை வைத்து தான் மக்களுக்கு நல்லது செய்கிறேன். காரணம், மூன்று வேளை உணவு உணவுக்காக நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். இதனால் தான் நான் இதை செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement