பிரபல நடிகைக்கு கேபிஒய் பாலா உதவி செய்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அதற்காக இவர் இரவு பகலாக தன்னை தானே தயார் செய்தார். பின் வகையில் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியில் KPY பாலா செய்யும் காமெடிகளுக்கு அளவே கிடையாது. இதன் மூலம் தான் இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்தும், பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார். மேலும், பாலா அவர்கள் நடிகர் மட்டுமில்லாமல், சமூக சேவை கொண்ட நபரும் ஆவார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். பின் இவர் மலைவாழ் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தந்து இருந்தார். அதே போல கடந்த ஆண்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து இருந்தார்.
சமூக சேவை செய்யும் பாலா:
இதனால் பாலாவை குட்டி ராகவா லாரன்ஸ் என்று சொல்கிறார்கள். தற்போது லாரன்ஸ் நடத்தி வரும் மாற்றம் அறக்கட்டளையில் பாலா இணைந்து சேவை செய்து கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் பிரபல நடிகைக்கு கேபிஒய் பாலா உதவி செய்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது 80 காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருந்தவர் பிந்து கோஸ். இவர் பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்திருக்கிறார்.

பிந்து கோஸ் குறித்த தகவல்:
இவர் ரஜினி, கமல் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். கடந்த சில வருடங்கள் ஆகவே இவர் உடல்நிலை சரியில்லாமல் தவித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் இவருடைய உடலில் பல்வேறு பிரச்சனைகள் இருந்திருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் பிந்து மருத்துவ செலவிற்கும், சாப்பிட கூட பணம் இல்லாமல் ரொம்பவே அவஸ்தை பட்டு வந்திருக்கிறார். இது தொடர்பாக நடிகை பிந்துகோஸ் பலபேட்டிகளில் கண்ணீர் மல்க கூடியிருந்தார். ஆரம்பத்தில் இவருக்கு நடிகர்கள் சிலர் உதவி செய்திருந்தார்கள். ஆனால், தற்போது அவர்கள் கூட கண்டுகொள்ளவில்லை.
https://www.youtube.com/watch?v=J3lLZ2ZGEk4
ஷகீலா வீடியோ:
ரஜினி, கமல் முன்னணி நடிகர்களிடம் உதவி கேட்டும் அவர்கள் எந்த ஒரு ரெஸ்பான்ஸ் செய்யவில்லையாம்.
இதை அடுத்து பிந்துகோஸின் நிலைமையை அறிந்த நடிகை ஷகிலா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர், தமிழ் சினிமா துறையின் மூலம் நம்மை சிரிக்க வைத்தவர் பிந்துகோஸ். இப்போது சாப்பிட கூட வழியில்லாமல் இருக்கிறார். அவர் வாழ்வதற்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ஷகிலாவின் வீடியோவை பார்த்த கேபிஒய் பாலா, பிந்து கோசுக்கு 80,000 பணத்தை கொடுத்து உதவி இருக்கிறார்.
View this post on Instagram
பாலா செய்த உதவி:
மேலும், பிந்துகோசிடம் பாலாவை அழைத்து சென்றதே ஷகிலா தான். இது தொடர்பாக ஷகீலா, ஒருவருக்கு உடல் சரியில்லை என்று நேத்து தான் பாலாவிடம் சொன்னேன். என் குழந்தை இன்னைக்கு வந்து நிற்கிறான். 80 ஆயிரம் ரூபாய் பணத்தை அவருக்கு கொடுத்தார். இதுக்கு மேல என்ன மருத்துவ செலவு வந்தாலும் என்னிடம் சொல்லுங்கள் என்று சொல்லி இருக்கிறான். அவனுடைய நல்ல உள்ளத்திற்கு அவன் என்றென்றும் நன்றாக இருப்பான் என்று கூறி நடிகை பிந்துகோஷுக்கு பாலா உதவி செய்த வீடியோவை ஷகிலா தற்போது சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் கேபிஒய் பாலாவின் மனதை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.






