விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. இவரை அனைவரும் வெட்டுக்கிளி என்று தான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் சாதாரண நபராகத்தான் விஜய் டிவியில் நுழைந்தார். மேலும் ஆரம்பத்தில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் காமெடி செய்து வந்த இவர் மற்றவர்கள் கொடுக்கும் கவுண்ட்டருக்கு உடனடியாக பதில் கவுண்ட்டர் கொடுத்து விடுவார்.
அதற்க்காக இரவு பகலாக தன்னை தானே தயார் படுத்திக்கொள்வார். அந்த வகையில் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். குக் வித் கோமாளி நிகழ்ச்சி சமையலை மையப்படுத்தி இருப்பதாக இருந்தாலும் அதிலும் செய்யும் காமெடிகள் தான் அந்த நிகழ்ச்சியை இந்த அளவிற்கு வளர்த்து விட்டது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட KPY பாலா செய்யும் காமெடிகளுக்கு அளவே கிடையாது.
குக் வித் கோமாளிக்கு பிறகு இவர் தற்போது வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய் சேதுபதியின் புலிக்குட்டி பாண்டி, யோகி பாபு நடித்த Shoe, சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறனின் ஆண்டி இந்தியன், நாய் சேகர், புலிக்குட்டி பாண்டி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார்.
குக் வித் கோமாளி பாலா நடிகர் மட்டுமில்லாமல் சமூக அக்கறை கொண்டவரும் ஆவார். தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள சிறியவர்களை படிக்க வைத்து வருகிறார். இந்த நிலையில் தான் இவருக்கு ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் புல்லட் ரக பைக் ஒன்றை அன்பளிப்பாக பெற்றுள்ளார். இதனை KPY பாலா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவின் மூலம் உறுதி செய்துள்ளார்.
மேலும் அந்த பதிவில் “நான் பெட்ரோல் இல்லாமல் பைக்கையே தள்ளீட்டு போனா எனக்கு புல்லட்டு பைக் கொடுத்ததற்கு நன்றி என்றும், இத்தனை நாளில் தான் ஓட்டும் முதல் புதிய பைக் இதுதான் என்றும் தற்போது வரையில் நான் செகண்ட் ஹாண்ட் பைக் தான் வைத்திருந்தேன் என்று நெகிழ்ந்து கூறியிருந்தார். இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ வைரலாகவே நீங்கள் இதனை விட பல மடங்கு உயரத்திற்கு செல்வீர்கள் என்று பதிவிட்டு வருகின்றனர் பாலாவின் ரசிகர்கள்.