மலைவாழ் மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் Kpy பாலா இலவச ஆம்புலன்ஸ் வழங்கியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. இவரை அனைவரும் வெட்டுக்கிளி என்று தான் அழைப்பார்கள். இவர் சாதாரண நபராகத்தான் விஜய் டிவியில் நுழைந்தார். ஆரம்பத்தில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் காமெடி செய்து வந்த இவர் மற்றவர்கள் கொடுக்கும் கவுண்ட்டருக்கு உடனடியாக பதில் கவுண்ட்டர் கொடுத்து விடுவார். அதற்க்காக இவர் இரவு பகலாக தன்னை தானே தயார் படுத்திக் கொண்டு இருந்தார்.

அந்த வகையில் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட KPY பாலா செய்யும் காமெடிகளுக்கு அளவே கிடையாது. தற்போது தான் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி கோலாகலமாக முடிவடைந்தது. ஆனால், இந்த சீசனில் பாலாவால் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்கு காரணம், இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதோடு இவர் பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார். மேலும், அவர்கள் நடிகர் மட்டுமில்லாமல், சமூக அக்கறை அவர்கள் நபரும் ஆவார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள சிறியவர்களை படிக்க வைப்பதுடன், ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தும் வருகிறார்.
சமூக சேவை செய்யும் பாலா:
அதுமட்டும் இல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைக்கும் பரிசுகளை கூட அவர் ஆதரவற்ற இல்லத்திற்கு தான் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் கூட இவருடைய பிறந்த நாளை ஒட்டி முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். இது குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள். பாலாவின் இந்த நல்ல மனசுக்கு தற்போது சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் இவர் மீண்டும் ஆம்புலன்ஸ்களை வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ஈரோடு அருகே உள்ள கடம்பூர் மலைவாழ் மக்களுக்காக இன்னொரு இலவச ஆம்புலன்ஸை பாலா வாங்கி தந்து வாங்கித் தந்திருக்கிறார்.
View this post on Instagram
KPY பாலா செய்த உதவி:
இந்த மலைவாழ் பகுதியில் 8000 பேருக்கு மேல் மக்கள் வாழ்கிறார்கள். இந்த இடத்தில் ஆம்புலன்ஸ் வசதி சுத்தமாகவே இல்லை. இங்கு நடக்கும் அறக்கட்டளை சேர்ந்த நண்பர் ஒருவர் தான் கே பி ஒய் பாலாவிற்கு தகவல் கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பாம்பு கடித்தாலும், ஹார்ட் அட்டாக் வந்தாலும், அவசர சிகிச்சை என்றாலும் உடனடியாக மருத்துவமனைக்கு போக முடியாமல் பல பேர் இறந்து இருக்கிறார்கள். இதை அறிந்த பாலா அவர்களுக்கு வாக்குறுதி அளித்து வெளிநாடுகள், உள்ளூரு என்று தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து தற்போது ஆம்புலன்ஸ் வாங்கி தந்திருக்கிறார். இது தொடர்பாக பாலா கூறி இருப்பது, இங்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்று கேள்விப்பட்டேன்.
பாலா அளித்த பேட்டி:
அதனால் தான் என்னால் முடிந்த சிறு உதவி செய்தேன். என்னுடைய டிரஸ் மூலம் காசை வாங்கி தானம் தர்மம் செய்ய எனக்கு விருப்பமில்லை. நானே உழைத்து சம்பாதித்து அதில் வரும் பணத்தில் மக்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும். இதுவே எனக்கு செம போதையாக இருக்கிறது. ரசிகர்கள் கொடுத்த ஆதரவு காரணமாகத்தான் நான் நிகழ்ச்சிகள் நிறைய செய்கிறேன். அதன் மூலம் வரும் வருமானத்தை என் சக்திக்கு மீறி இப்படி என்னால் செய்ய முடிந்தால் நல்ல காரியத்திற்கு செலவிடுவது சந்தோஷம். இந்த ஆண்டு இன்னும் பத்து ஆம்புலன்ஸ் வாங்கி தருவேன். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்று கூறி இருக்கிறார்.

ரசிகர்கள் கமெண்ட்ஸ் :
தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து பலரும் கே பி ஒய் பாலாவை பாராட்டி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இவரை கோலிவுட் சோனு சூட் என்றும் பாராட்டி வருகிறார்கள். குக்கு வித் கோமாளி மூலம் பிரபலமான எத்தனையோ பேர் அடுத்தடுத்து கார்களை வாங்கினார்கள். ஆனால், பாலாவோ மக்களுக்காக இப்படி ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து இருப்பது பாராட்டக்குரியது.






