நடிகை பிந்து கோஸ் பற்றி கேபிஒய் பாலா பகிர்ந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 80 காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருந்தவர் பிந்து கோஸ். இவர் பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்திருக்கிறார். இவர் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். கடந்த சில வருடங்கள் ஆகவே இவர் உடல்நிலை சரியில்லாமல் தவித்து வந்தார்.
அதுமட்டுமில்லாமல் இவருக்கு உடலில் பல்வேறு பிரச்சனைகள் இருந்திருந்தார். இதை அடுத்து கடந்த சில மாதங்களாக பிந்து மருத்துவ செலவிற்கும், சாப்பிட கூட பணம் இல்லாமல் ரொம்பவே அவஸ்தை பட்டு வந்திருந்தார். இது தொடர்பாக நடிகை பிந்துகோஸ் பலபேட்டிகளில் கண்ணீர் மல்க கூறியிருந்தார். ஆரம்பத்தில் இவருக்கு நடிகர்கள் சிலர் உதவி செய்திருந்தார்கள். ரஜினி, கமல் முன்னணி நடிகர்களிடம் உதவி கேட்டும் அவர்கள் எந்த ஒரு ரெஸ்பான்ஸ் செய்யவில்லையாம்.
பிந்து கோஸ் நிலை:
இதை அடுத்து பிந்துகோஸின் நிலைமையை அறிந்த நடிகை ஷகிலா வீடியோ ஒன்றை அறிந்து இருந்தார். அதில் அவர், தமிழ் சினிமா துறையின் மூலம் நம்மை சிரிக்க வைத்தவர் பிந்துகோஸ். இப்போது சாப்பிட கூட வழியில்லாமல் இருக்கிறார். அவர் வாழ்வதற்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என்று கூறியிருந்தார். இதை அடுத்து கேபிஒய் பாலா, பிந்து கோசுக்கு 80,000 பணத்தை கொடுத்து உதவி இருந்தார்.
மேலும், பிந்துகோசிடம் பாலாவை அழைத்து சென்றதே ஷகிலா தான்.
கேபிஒய் பாலா செய்த உதவி:
இதற்கு ஷகீலா நன்றி தெரிவித்து வீடியோ போட்டு இருந்தார். அதோடு ரசிகர்கள் கேபிஒய் பாலாவின் மனதை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் உடல்நிலை குறைவு காரணமாக நடிகை பிந்து கோஸ் அவர்கள் நேற்று காலமானார். இவருடைய உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் கேபிஒய் பாலா, ஒரு சீனியர் நடிகையாக அவர்களைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். ஆனால், அவர்களை நான் நேரில் சந்தித்து பேசியது கிடையாது.
கேபிஒய் பாலா பேட்டி:
இப்படி இருக்கும்போது சகிலா மேடம் தான் ஒரு நாள் எனக்கு போன் செய்து அவர்களுடைய பிரச்சினையை பற்றி சொன்னார். உன்னால் ஏதாவது செய்ய முடிந்தால் பண்ணு என்றும் சொன்னார். உடனே நான் அவருடைய வீட்டுக்கு போய் பார்த்தேன். என்னை அவர்கள் பார்த்ததே கிடையாது. ஆனால், சகிலா மேடம் என்னை பற்றி சொல்லிருந்தார்கள். அதனால் என்னை பார்த்ததுமே அழ ஆரம்பித்துவிட்டார். ஆறுதலாக சில வார்த்தைகள் பேசினேன். பிறகு உடல்நிலை குறித்தும் கேட்டபோது, டாக்டர்கள் குணமாக்கிடலாம் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள் என்று சொன்னார்.
பிந்து கோஸ் பற்றி சொன்னது:
உடலில் அவருக்கு பிரச்சினை இருந்தாலும் மனதளவில் அவர் ரொம்ப சந்தோஷமாகத்தான் இருந்தார். அதனால் மீண்டும் வந்துருவார் என்று தோன்றியது. தன்னுடைய சினிமா நடிகர்களைப் பற்றி அவ்வளவு ஆர்வமாக பேசி இருந்தார். பழைய நினைவுகள் அவர்களிடம் அப்படியே இருந்தது. ரொம்ப நாள் பழகுனவர் போல் பேசி இருந்தார். ஒரு மணி நேரத்துக்கு மேல் அவரிடம் பேசி இருந்தேன். பிறகு என்னால் முடிந்த ஒரு தொகை கொடுத்து விட்டு வந்தேன். வேறு ஏதாவது உதவினாலும் கூப்பிட்டு கேளுங்கள் என்று சொன்னேன். பார்த்துவிட்டு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள்ளே இப்படி ஒரு சோகம் நடந்திருக்கிறது. இது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. நான் இப்போது வெளியூரில் இருப்பதால் அவர்களுடைய அஞ்சலிக்கு செல்ல முடியவில்லை என்று எமோஷனலாக பேசி இருக்கிறார்.