டேய், வந்ததே 7 செகண்ட் தானடா – தீனாவை கேலி செய்த நபர். அதற்க்கு அவர் கொடுத்த உருக்கமான பதில்.

0
130660
dheena
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

மாஸ்டர் படத்தில் விஜய்யின் JD கதாபாத்திரத்தை விட விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. பலரும் மாஸ்டர் படம் விஜய் படம் இல்லை விஜய் சேதுபதி படம் என்று கிண்டலடித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் பல வசனங்கள் கைதட்டலை பெற்றது. அதிலும் குறிப்பாக ostrich பறவை முட்டை போடுவதோடுன் ஒப்பிட்டு விஜய் சேதுபதி சொன்ன வசனம் பல மீமாக வந்துகொண்டு இருக்கிறது.

இதையும் பாருங்க : போலீஸ் கிட்ட சொல்லாதடா – சித்ரா இறந்த பின் நண்பரிடம் பேசியுள்ள ஹேம்நாத் – ஷாக்கிங் ஆடியோ.

- Advertisement -

அதே போல இந்த படத்தில் மாளவிகா, ஆண்ட்ரியா, ரம்யா, கௌரி கிஷன், சாந்தனு என்று பலர் நடித்திருந்தாலும் இவர்களுக்கு எல்லாம் படத்தில் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதே போலத்தான் இந்த படத்தில் நடித்த KPY தீனாவும் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போன் கால் பிராங்க் மூலம் பிரபலமடைந்த தீனா, லோகேஷ் கனகராஜ் நடித்த கைதி படத்தின் மூலம் கவனம் பெற்றார்.

இந்த படத்தில் கார்த்திக்குடன் படம் முழுதும் பயணம் செய்வார் தீனா. ஆனால், மாஸ்டர் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தார் தீனா அதே போல இவரது கதாபாத்திரமும் மனதில் பதியும்படி இல்லை. இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் படத்தில் தீனா நடித்ததை பலரும் கேலி செய்து வருகின்றனர். படத்தை விட நீங்கள் வந்த காட்சியை படத்திற்காக கொடுத்த பேட்டி தான் அதிகம் என்று கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அதே போல ஒரு சிலரோ படத்தில் பூவையருக்கே முக்கிய கதாபாத்திரத்தம் இருக்கிறது என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர். இப்படி இருக்க மாஸ்டர் படக்குழவுடன் தீனா எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதற்கு இன்ஸ்டாகிராம்வாசி ஒருவர், டேய் வந்ததே 7 செகன்ட் தானடா என்று கேலியாக கமன்ட் செய்ய, அதற்கு தீனா, எனக்கு அதுவே பெரிய விஷயம் பிரதர். அந்த படத்துல 7 செகண்ட் வர்றதுக்கு எனக்கு 7 வருஷம் ஆச்சி என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement