`கலக்கப்போவது யாரு’ தீனாவுக்குக்கு டும் டும் டும் – பொண்ணு இவர் தான்.

0
5218
Dheena
- Advertisement -

கலக்கப்போவது யாரு தீனா கல்யாணம் செய்துகொள்ள இருக்கும் மணப்பெண் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு காமெடி நடிகர்கள் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகர் தீனா. இந்த நிகழ்ச்சியில் இவர் சரத் என்பவருடன் இணைந்து செய்த காமெடிகளை நாம் யாராலும் மறக்க முடியாது.

-விளம்பரம்-

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த புகழ் மூலம் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த ‘பா பாண்டி’ படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தார். அதன்பின்னர் ‘தும்பா’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தீனா நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களிலும் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனால், இவருக்கு மிகப் பெரிய புகழை ஏற்படுத்தித் தந்தது கைதி படம் தான்.

- Advertisement -

தீனா திரைப்பயணம்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படத்தின் மூலம் தான் தீனா மக்கள் மத்தியில் படு பேமஸ் ஆனார். மேலும், இந்த திரைப்படத்திற்கு பின்னர் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உருவாக்கினார்கள். இதை அடுத்து இயக்குனர் லோகேஷ் இயக்கிய விஜய்யின் மாஸ்டர் படத்திலும் தீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தீனா திருமணம்:

அது மட்டும் இல்லாமல் இவர் ஸ்டேஜ் ஷோக்களை கூட செய்து கொண்டிருக்கின்றார். மேலும், சில மாதங்களுக்கு முன்பு தான் இவர் தன்னுடைய சொந்த ஊரில் வீட்டை கட்டி முடித்திருந்தார். அதனுடைய புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்த நிலையில் நாளை ஜூன் ஒன்றாம் தேதி தீனாவிற்கு திருமணம் நடக்க இருக்கிறது. இவருடைய திருமணம் திருவாரூரில் நடைபெறுகிறது.

-விளம்பரம்-

தீனா அளித்த பேட்டி:

மேலும், இது குறித்து தீனா கூறியிருப்பது, வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்று பெரியவர்கள் சொல்வார்கள். வீட்டை கட்டி முடித்த கொஞ்ச நாட்களிலேயே எனக்கு கல்யாணமும் கைகூடி வந்துவிட்டது. எல்லாம் கடவுள் ஆசிர்வாதம் தான். அதோடு எனக்கு டிவி தந்த ஆதரவும், ரசிகர்களுடைய அன்பு தான் இதற்கெல்லாம் காரணம். ஷூட்டிங்கில் இருந்ததனால் நிறைய பேருக்கு என்னால் நேரில் போய் பத்திரிகை கொடுக்க முடியவில்லை.

திருமணம் குறித்து சொன்னது:

ஃபோன் செய்து கொண்டும், whatsapp மூலம் தான் தகவல் அனுப்பி கொண்டிருக்கிறேன். சொந்தக்காரர்களுக்காக திருவாரூரில் கல்யாணம் நடக்க இருக்கிறது. இதில் பிரபலங்கள் கலந்து கொள்வார்களா என்று தெரியவில்லை. அதனால் சினிமா, சின்னத்திரை பிரபலங்களுக்காக சென்னையிலும் திருமண வரவேற்பு நடத்த இருக்கிறோம். நான் திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண் கிராபிக் டிசைனராக இருக்கிறார். எங்களுடையது அரேஞ்ச் மேரேஜ் தான். இனிமேதான் நாங்கள் காதலிக்கப் போகிறோம் என்று சிரித்துக் கொண்டே கூறியிருக்கிறார்.

Advertisement