நாடு முழுவதும் கொரோனாவின் சீற்றம் அதிகமாகி கொண்டிருப்பதால் ஊரடங்கு உத்தரவை இன்னும் சில நாட்களுக்கு நீட்டித்து உள்ளது அரசாங்கம். ஊரடங்கு உத்தரவால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த கொரோனா வைரசால் பல சுப காரியங்கள் நின்று போய் உள்ளது. இருந்தாலும் இந்த இக்கட்டான சமயத்தில் பல பிரபலங்கள் தங்களுடைய திருமணங்களை மிக எளிமையான முறையில் வீட்டிலேயே நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது விஜய் டிவி புகழ் யோகி என்கிற யோகேஷ் அவர்கள் எளிமையான முறையில் திருமணம் செய்து உள்ளார்.
இவரின் திருமண புகைபடங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் யோகேஷ் என்கிற யோகி. இவர் சிரிச்சா போச்சு, கலக்கப்போவது யாரு போன்ற பல்வேறு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.
பொதுவாகவே விஜய் டிவியில் உள்ள ஒவ்வொரு நகைச்சுவை நடிகரும் ஒவ்வொரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியுள்ளார்கள். அதே போல் யோகி அவர்கள் ஜல்ஸா குமாரு என்ற நித்தியானந்தா சாமியின் எபிசோட் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆனார். இன்றும் இவர் செய்த நித்யானந்தா காமெடி வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இவர் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் கூட நடித்து உள்ளார். இந்நிலையில் காமெடி நடிகர் யோகேஷ் அவர்கள் கொரோனா காரணமாக சில தினங்களுக்கு முன்பு எளிமையான முறையில் தன்னுடைய திருமணத்தை செய்துள்ளார். இவரின் திருமணம் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் யோகிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.