""
-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

அன்று குழந்தையை நினைத்து கலங்கிய நவீனின் இரண்டாம் மனைவி, இன்று கோலாகலமாக வளைகாப்பு. வைரலாகும் வீடியோ.

0
493
Kpy Navin
-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்னும் காமெடி நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நவீன். கடந்த 2016 ஆம் ஆண்டு திவ்யலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில மாதங்களாக மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவருடன் நெருக்கத்தில் இருந்து வந்த நவீன் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி திருமணம் செய்து கொளவிருந்த நிலையில், நவீனின் முதல் மனைவி கொடுத்த புகாரின் பேரில் இவர்களது திருமணம் நிறுத்தப்பட்டு நவீன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

-விளம்பரம்-

முதல் மனைவி திவ்யா :

தன் கணவர் மீது புகார் அளித்து அவரது முதல் மனைவி அப்போது அளித்த பேட்டி ஒன்றில் 2007 ஆம் ஆண்டில் இருந்தே தனக்கு நவீனை நன்றாக தெரியும். சிறு வயதில் நவீனின் தங்கையிடம் டியூசன் செல்வதற்காக நவீன் வீட்டிற்கு அடிக்கடி சென்றபோது எங்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஒரு நாள் வீட்டில் நாங்கள் தனியாக இருந்த போது நவீன் எனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார்.

நவீன் – கிருஷ்ணகுமாரி :

அவர் என்னுடன் கடைசி வரை இருப்பார் என்று தான் நம்பினேன். ஆனால், அவர் என்னை ஏமாற்றி விட்டார் என்றும் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார். இருப்பினும் நவீன் சில மாதங்களில் ஜாமினில் வெளியில் வந்தார். ஜாமினில் வெளியில் வந்த அவர் தனது காதலி கிருஷ்ணகுமாரியுடன் தான் வாழ்ந்து வந்தார். அவருடன் இணைந்து அடிக்கடி புகைப்படங்கள் வீடியோக்கள் என்று பதிவிட்டு வந்தார் நவீன்.

-விளம்பரம்-

ஆனால், அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததா இல்லையா ? முதல் மனைவியிடம் இருந்து விவகாரத்து பெற்றாரா இல்லையா ? போன்ற எந்த தகவலையும் நவீன் சொல்லவில்லை. இப்படி ஒரு நிலையில் நவீனுக்கும் கிருஷ்ணாகுமாரிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நவீன், கிரிஷ்ணகுமாரி இருவரும் தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாக பரவி வந்தது.

-விளம்பரம்-

விஜய் டிவி நிகழ்ச்சியில் கிருஷ்ணகுமாரி :

இதை பார்த்த பலரும் நவீனுக்கு இரண்டாம் திருமணம் முடிந்துவிட்டதா என்று சந்தேகத்தை எழுப்பினர். அதே போல தனது இரண்டாம் திருமணம் குறித்து இதுவரை எதுவும் சொல்லாமல் தான் இருந்து வருகிறார் நவீன். மேலும்., முதல் மனைவியை நவீன், சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டாரா இல்லையா என்பது கூட உறுதியாகவில்லை. இது ஒருபுறம் இருக்க கிருஷ்ணகுமாரி சமீபத்தில் விஜய் டிவி நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார்.

கலங்கிய கிருஷ்ணகுமாரி :

மேலும், அந்த ப்ரோமோவில் பேசியுள்ள கிருஷ்ணகுமாரி ‘உனக்கெல்லாம் குழந்தையே பிறக்காது, சீக்கிரம் பிரிஞ்சிடுவீங்க என்று சாபம் விட்டார்கள்’ என்று கலங்கி பேசி இருந்தார்.இப்படி ஒரு நிலையில் தன் இரண்டாம் மனைவிக்கு தடபுடலாக வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார் நவீன். இந்த நிகழ்வில் பல விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news