வணங்கான் படத்திலிருந்து விலகியது குறித்து கீர்த்தி செட்டி அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் கீர்த்தி ஷெட்டி. இவர் இளம் வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்தார். பின் தொடர்ந்து இவர் விளம்பர படங்களில் நடித்து தன்னுடைய அழகாலும் புன்னகையாலும் ரசிகர்களை கவர்ந்தார். பிரபல தெலுங்கு நடிகரும், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகன் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் உப்பனா.
இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. மீண்டும் இவர் வைஷ்ணவ் தேஜ் உடன் ‘2 கண்ட்ரிஸ்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். பின் லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழியிலும் உருவாகி இருக்கும் படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்து இருக்கிறார். கடந்த ஆண்டு ‘ஷ்யாம் சிங்கா ராய்’ என்ற படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்து இருக்கிறார்.
கீர்த்தி ஷெட்டி திரைப்பயணம்:
இந்தப் கீர்த்தி இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கி இருக்கிறார். இது மறுபிறவியை மையமாக கொண்ட படம். இப்படத்தில் நானி, சாய் பல்லவி, மடோனா செபஸ்டின், முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை எடுத்து தற்போது இவர் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கஸ்டடி என்ற படத்தில் நடித்திருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படம் உருவாகி இருக்கிறது.
கஸ்டடி படம்:
இந்த படம் மே 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, சரத்குமார், அரவிந்த சாமி, வெண்ணிலா கிஷோர், சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பின் இவர் இயக்குனர் பாலா- சூர்யா நடிப்பில் உருவாகி வந்த வணங்கான் என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார்.
வணங்கான் படம்:
ஆனால், திடீரென்று இந்த படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார். இது குறித்து பாலா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர், வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி எடுத்த முடிவு. அதில் அவருக்கு தான். இருந்தாலும் நலன் கருதி அவர் இந்த முடிவு எடுத்திருக்கிறார். அதே போல் இந்த படத்துக்கு முதலில் கீர்த்தி செட்டி கதாநாயகியாக ஒப்பந்தமாக இருந்தார். அவரும் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார் என்று கூறியிருந்தார்.
கீர்த்தி செட்டி அளித்த பேட்டி:
இந்த நிலையில் சமீபத்தில் கஸ்டடி படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கீர்த்தி செட்டி கலந்து இருந்தார். அப்போது அவரிடம் வணங்கான் படம் குறித்து கேள்வி கேட்டு இருந்தார்கள். அதற்கு அவர், வணங்கான் படத்தின் தயாரிப்பு பணிகள் நீண்டு கொண்டே சென்றது. இதனால் தான் நான் படத்தில் இருந்து விலக முடிவெடுத்தேன். பாலா- சூர்யா இருவருக்கும் இடையே எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை என்று கூறியிருக்கிறார்.