தனுஷ் படத்தில் இருந்து விலகிய பிரியங்கா மோகன் ? – அவருக்கு பதில் இந்த 18 வயது நடிகையா ?

0
755
priyanka
- Advertisement -

தனுஷ் நடிக்கும் புது படத்தில் ப்ரியாங்கா மோகன் விலகி வேறு ஒரு நடிகை நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதற்கு பின் தனுஷ் அவர்கள் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். கலைப்புலி எஸ் தாணு உடைய வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறது. செல்வராகவன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை முடிந்த நிரையில் படக்குழு அடுத்த கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

- Advertisement -

தனுஷ் நடிக்கும் படங்கள்:

இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் திருச்சிற்றம்பலம், வாத்தி, sir ஆகிய பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதேபோல் தனுஷ் நடித்த ஹாலிவுட் படம் தி கிரேட் மேன். இந்த படம் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் பின்னர் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியிடப்படுகிறது. இந்த படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இதை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தனுஷ் கமிட் ஆகி இருக்கிறார்.

ப்ரியங்கா மோகன்-தனுஷ் கூட்டணி:

சமீபத்தில் தான் இயக்குனர் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளிவந்த சாணி காயிதம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து இயக்குனர் மாதேஸ்வரன்- தனுஷ் கூட்டணியில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகனிடம் பேசப்பட்டு இருந்தது. பின் அவர் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவல் வெளியான போதே பலரும் கேலி செய்து மீம் போட்டனர். இந்நிலையில் இந்த படத்தில் ப்ரியாங்கா மோகன் விலகி வேறு ஒரு நடிகை நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

தனுஷ் படத்தில் நடிக்கும் நடிகை:

அதாவது இந்த படத்தில் பிரியங்கா மோகனின் கால்சீட் கிடைக்காத காரணத்தினால் இந்த படத்தில் நடிகை கீர்த்தி செட்டியை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. கீர்த்தி ஷெட்டிக்கு தற்போது 18 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் கீர்த்தி ஷெட்டி. இவர் இளம் வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்தார். பின் தொடர்ந்து பல விளம்பர படங்களில் நடித்து இருந்தார். இவர் தன்னுடைய அழகாலும் புன்னகையாலும் ரசிகர்களை கவர்ந்தார்.

கீர்த்தி ஷெட்டி திரைப்பயணம்:

பிரபல தெலுங்கு நடிகரும், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகன் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் உப்பனா. இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருந்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழியிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ‘ஷ்யாம் சிங்கா ராய்’ என்ற படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்து இருந்தார். தற்போது சூர்யா நடித்து வரும் 41வது படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement