இந்த பாடலை மிஸ் பண்ணினால் நீ ரொம்ப வருத்தப்படுவ – இளையரஜா பேச்சை கேட்டதால் இளம் வயதிலேயே சித்ராவிற்கு கிடைத்த தேசிய விருது.

0
802
ilayaraja
- Advertisement -

தமிழ் சினிமாத் துறையில் சின்னக் குயில் சித்ரா என்று சொன்னால் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு மனதை வருடும் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். இவர் ஏராளமான மொழிகளில் 25,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார். இவர் தனது பாடலுக்காக 6 முறை தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். பாடகி சித்ரா அவர்கள் சினிமா துறைக்குள் நுழைந்து 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. இவருடைய குரலை வைத்தே சித்ரா தான் பாடியிருக்கிறார் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவருடைய குரல் மிகவும் பரிச்சயம். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, பெங்காலி, ஒரியா, பஞ்சாலி, குஜராத்தி என அனைத்து மொழிகளிலுமே பாடியுள்ளார்.

-விளம்பரம்-

இவரது பாடலுக்கும் இனிமையான குரலுக்கும் இன்றளவும் லட்சக் கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போது சித்ரா அவர்கள் விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர்,சீனியர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் பாடகி சித்ரா குறித்து பிரபல எழுத்தாளர் அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர் வேற யாரும் இல்லைங்க, சுரா தான். சினிமா உலகில் மிகப்பிரபலமான எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமானவர் சுரா. இவர் தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நடிகர்களை பற்றி அறியாத பல விஷயங்களை சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.

- Advertisement -

பாடகி சித்ரா குறித்து எழுத்தாளர் சுரா அளித்த பேட்டி:

அதில் அவர் பாடகிக்கு சித்ரா குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது, பிரபல பின்னணி பாடகி சித்ராவை தமிழில் அறிமுகப்படுத்தி வைத்தது இளையராஜா தான். 1985ஆம் ஆண்டு நோக்கு எந்த தூரத்து கண்ணும் என்ற ஒரு மலையாள படம் வெளிவந்தது. பாசில் தான் அந்த படத்தை இயக்கினார். அந்த படத்தில் கதாநாயகியாக நதியா நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் நதியாவிற்கு மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதற்குப் பின் அந்தப் படத்தை தமிழில் பூவே பூச்சூடவா என்று ரீமேக் செய்திருந்தார்கள். தமிழிலும் பாசில் இயக்கி, நதியா தான் கதாநாயகியாக நடித்தார்.

தமிழ் சினிமாவில் சித்ராவுக்கு கிடைத்த வாய்ப்பு:

தமிழில் இளையராஜா இசையமைத்தார். மலையாளத்தில் அந்த படத்தில் ஒரு பாடலை கே எஸ் சித்ரா பாடியிருந்தார். தமிழிலும் அவரை பாட வைக்க இயக்குனர் நினைத்தார். அதற்காக அவரை சென்னைக்கு வரவழைத்து இளையராஜாவிடம் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். மேலும், இளையராஜாவை சித்ராவின் குரல் வெகுவாக கவர்ந்தது. பின் நீதானா அந்தக்குயில் படத்தில் பூஜைக்கேத்த பூவிது என்ற பாடல் பாடுவதற்கான வாய்ப்பு சித்ராவிற்கு கிடைத்தது. பின்னர் சின்ன குயில் பாடும் என்ற பாடலை பாடும் வாய்ப்பபை இளையராஜா சித்ராவிற்கு கொடுக்கிறார். அந்த பாடல் மூலம் தான் அவருக்கு சின்ன குயில் சித்ரா என்ற பெயர் கிடைத்தது.

-விளம்பரம்-

சித்ரா பாடிய படங்கள்:

பின் பாலசந்தர் சாரின் சிந்து பைரவி படத்தில் பாடறியேன் படிப்பறியேன் என்ற பாடலை பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், அந்த பாடலை ரெக்கார்டிங் செய்ய திட்டம் இருந்த நாளில் சித்ராவிற்கு தேர்வு இருந்தது. அப்போது அவர் படித்துக் கொண்டிருந்தார். பின் இளையராஜாவிடம் வந்து சித்ரா தேர்வு இருப்பதைக் குறித்து கூறியிருக்கிறார். இந்த பாடலை மிஸ் பண்ணினால் நீ ரொம்ப வருத்தப்படுவ, இந்த பாடல் மூலம் உனக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பு இருக்கு. பாட்டா, படிப்பா இரண்டில் எது வேண்டும் என்பதை நீயே தீர்மானித்துக் கொள். அடுத்த முறை கூட தேர்வு எழுதலாம். ஆனால், இந்த பாடல் பாட இதை விட்டால் வாய்ப்பு கிடைக்காது.

சித்ராவிற்கு தேசிய விருது கிடைக்க காரணம்:

உனக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று இளையராஜா உறுதியாக கூறி இருந்தார். என்ன செய்வது என்று புரியாமல் மனக்குழப்பத்தில் இருந்த சித்ரா பாட்டு பாடலாம் என்று முடிவெடுத்து பாட்டையும் பாடி முடித்தார். அந்த பாடல் மிகப் பெரிய சூப்பர் ஹிட்டானது. இளையராஜா சொன்னதுபோல் அந்தப் பாடலுக்காக சித்ராவுக்கு தேசிய விருதும் கிடைத்தது. வாழ்க்கையில் மிகப் பெரிய உயரத்திற்கு போக வேண்டும் என்றால் சில நேரங்களில் சில தியாகங்களை செய்ய வேண்டிவரும். அப்படி தியாகங்களை செய்து தயாராக இருந்தால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக சித்ரா இருக்கிறார். அவர் செய்த தியாகத்திற்கு அவருக்கு பலனும் கிடைத்தது என்று கூறியிருக்கிறார்.

Advertisement