முத்து படத்தில் ஜமீந்தார் ரஜினியின் பெயர் என்னனு இது வர நோட் பன்னீங்களா ? “R” னு கையெழுத்து போடுவார் ரஜினி.

0
453
rajini
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் கே. எஸ். ரவிகுமார் ஒருவர். கே. எஸ். ரவிகுமார் அவர்கள் திரைப்பட இயக்குனருக்கு மட்டுமில்லாமல் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித் குமார், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி உள்ளார். அதோடு இவரை சீனியர் டைரக்டர் என்று கூட சொல்லலாம். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி அடைந்து உள்ளது. இவர் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பார். இது வழக்கமான ஒன்றாக கே. எஸ். ரவிகுமார் வைத்து உள்ளார்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் இவர், நாட்டாமை, நட்புக்காக, அவ்வை சண்முகி, தெனாலி, படையப்பா, முத்து, வில்லன், வரலாறு, தசாவதாரம் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். மேலும், இவர் இயக்கிய பல படங்கள் பிளாக் பஸ்டர் தான். அதே போல ரஜினியை வைத்து இவர் இயக்கிய முத்து, படையப்பா போன்ற படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது.

- Advertisement -

கே எஸ் ரவிக்குமார் முதன் முறையாக ரஜினியுடன் கைகோர்த்து 1995 ஆம் ஆண்டு வெளியான முத்து படம் மூலம் தான். இந்த படத்தில் ரஜினி, அப்பா மற்றும் மகன் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் மகன் ரஜினியின் பெயர் முத்து என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், ஜமீந்தாராக வரும் ரஜினியின் பெயர் யாருக்கும் தெரியாது.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கே எஸ் ரவிக்குமார் கூறுகையில், அந்த கதாபாத்திரத்திற்கு பெயர் எல்லாம் ஒன்றும் வைக்கவில்லை. அந்த கதாபாத்திரம் ஒரு ஜமீன்தார். அதற்கு பெயர் வைத்தோமா இல்லையா? அந்த கதாபாத்திரத்திற்கு என்ன பெயர் என்பது கூட எனக்கு ஞாபகம் இல்லை. அதை பற்றி எழுதும் போது கூட அவர் ஒரு ஜமிந்தார் என்று மட்டும் தான் எழுதினோம் என்று கூறியுள்ளார் கே எஸ் ரவிகுமார்.

-விளம்பரம்-

கடந்த சில தினங்களுக்கு இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் லிங்கா படம் குறித்து அளித்திருந்த பேட்டி அளித்து இருந்தார். அதாவது, லிங்கா படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எங்க யாருக்குமே பிடிக்கல. அந்த பலூன் காட்சியை நாங்கள் வைக்கவில்லை. படத்தின் பாடல் காட்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது இடையில் கொஞ்சம் பிரேக் கிடைத்தது. அப்போது ரஜினிகாந்த் அவர்கள் படத்தினுடைய காட்சிகளை போட்டு காண்பிக்க சொன்னார்.

உடனே நான் நிறைய கட் பண்ண வேண்டியிருக்கிறது. இளமை ரஜினிகாந்த் காண்பிக்க வேண்டும் என்று சொன்னேன். அவர், இந்த படத்திற்கு லிங்கா தானே ஹீரோ. அதனால் இளமை காட்சியை கம்மியாக காண்பியுங்கள்.லிங்கா கதாபாத்திரத்தை அதிகமாக காண்பியுங்கள் என்று சொன்னார். இதையெல்லாம் என்னுடைய அசிஸ்டன்ட் இயக்குனருக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. வேறு வழியில்லாமல் நாங்கள் கிளைமாக்ஸ் காட்சியை எடுத்தோம். அதுமட்டுமில்லாமல் அந்த பலூன் காட்சியே முதலில் இல்லை. பின் என்னென்னவோ பண்ணி அந்த கிளைமாக்ஸ் காட்சி வந்தது. ஆனால், எங்களுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. அதே போல் கிளைமாக்ஸ் காட்சியும் மக்கள் மத்தியில் பெரிய அளவு பேசப்படவில்லை என்று கூறியிருந்தார்.

Advertisement