‘வரலாறு’ அஜித் கதாபாத்திரப் பின்னணியில் சிவசங்கர் மாஸ்டர் – ks ரவிக்குமார் சொன்ன தகவல்.

0
553
varalaru
- Advertisement -

இந்திய சினிமா உலகில் மூத்த நடன இயக்குனராகவும், நடிகராகவும் இருந்தவர் சிவசங்கர் மாஸ்டர். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் 1300 படங்களில் டான்ஸ் மாஸ்டராக இருந்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவர் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு இருந்தார். பின் இவரின் உடல்நிலை மோசமாகி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று இருந்தார்.

-விளம்பரம்-
sivashankar

மேலும், ஹைதராபாத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து இருந்தாலும் சிகிச்சை பலனின்றி சில தினங்களுக்கு முன்பு சிவசங்கர் உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகில் மிகப் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவருடைய இழப்பிற்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். பின் இவருடைய உடலை ஐதராபாத் பிலிம் சிட்டி அருகே உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் சிவசங்கர் மாஸ்டர் உடன் வரலாற்று படத்தில் பணியாற்றிய நினைவுகளை இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, வரலாற்று படத்தில் அவருடன் பணியாற்றுவதற்கு முன்பே எனக்கு சிவசங்கர் மாஸ்டரை தெரியும். நாங்கள் வரலாற்று படத்தை தொடங்கியபோது தன்னுடைய கதாபாத்திரத்தை அஜித் தவறாக புரிந்து கொள்வாரோ? என்ற தயக்கம் இருந்தது. பின் நான் சிவசங்கர் மாஸ்டர் குறித்து தான் அஜித்திடம் சொல்லி அவரை ஊக்கப்படுத்தினேன். படத்திலுள்ள கதாப்பாத்திரம் போலவே நிஜ வாழ்க்கையிலும் சிவசங்கர் மாஸ்டருக்கு இரண்டு மகன்கள் உண்டு.

மேலும், அவரது உடல் மொழியில் மட்டுமே சிறிது பெண் தன்மை இருக்கும். அதற்கு காரணம் அவருடைய நடன கலை தான். அவர் வணக்கம் சொல்வது, திட்டுவது, வெற்றிலை போடுவது என அனைத்துமே பெண் சாயல் இருக்கும். ஆனால், அதை யாரும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வில்லை என்று அஜித்திடம் கூறினேன். பின் அஜித்தும் சரி என்று சொல்லி நடித்தார். மாஸ்டர் மீதான அன்பின் காரணமாகவே நான் அந்த படத்தில் சிவசங்கர் என்ற பெயரை அஜித்துக்கு வைத்தேன். மாஸ்டர் எப்போதுமே ஜவ்வாது பூசிக் கொள்வார். அவர் ஒவ்வொரு முறையும் என் அலுவலத்திற்கு வரும்போது ஒட்டுமொத்த அலுவலகமும் மணக்கும் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement