என்னோட அந்த ரெண்டு படத்த சேத்து வச்சி தெலுங்குல எடுத்தாங்க, அத அப்படியே தமிழ்ல தனுஷ வச்சி எடுத்துட்டாங்க – கே எஸ் ரவிகுமார்

0
526
- Advertisement -

தனுஷ் நடித்திருக்கும் படம் என்னுடைய கதை என்று இயக்குனர் கே. எஸ். ரவிகுமார் கூறியிருப்பது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் கே. எஸ். ரவிகுமார் ஒருவர். கே. எஸ். ரவிகுமார் அவர்கள் திரைப்பட இயக்குனருக்கு மட்டுமில்லாமல் திரைப்பட நடிகரும் திரைப்பட இவர் ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித் குமார், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி உள்ளார். அதோடு இவரை சீனியர் டைரக்டர் என்று கூட சொல்லலாம். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி அடைந்து உள்ளது.

-விளம்பரம்-

இவர் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பார். இது வழக்கமான ஒன்றாக கே. எஸ். ரவிகுமார் வைத்து உள்ளார்.தமிழ் சினிமாவில் இவர், நாட்டாமை, நட்புக்காக, அவ்வை சண்முகி, தெனாலி, படையப்பா, முத்து, வில்லன், வரலாறு, தசாவதாரம் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். பல இவர் இயக்கிய பல படங்கள் பிளாக் பஸ்டர் தான். அதே போல ரஜினியை வைத்து இவர் இயக்கிய முத்து, படையப்பா போன்ற படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில்இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் கொடுத்திருந்த ஒரு பேட்டியில் என்னுடைய இரண்டு கதையை சேர்த்துதான் தனுஷ் நடித்திருக்கும் ஒரு படம் எடுத்திருக்கிறார்கள் அது தெலுங்கிலும் எடுத்து விட்டார்கள் என்று கூறினார். அதில் முதல் படம் எதிரி மற்றொரு படம் மின்சார கண்ணன். எதிரி திரைப்படத்தில் தன்னுடைய ஒரு நண்பருக்காக ஒரு திருமணத்திற்கு சென்று திருமண பெண்ணை மாற்றி கடத்தி கொண்டு வ்ருவார்கள்.

ஆனால் அவனுடைய நண்பன் ஏற்கனவே தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு வருவான் எனவே அந்த படத்தின் ஆரம்பத்தை எடுத்துக்கொண்டனர்.அதே போல விஜய், குஷ்பு, ரம்பா நடித்திருந்த மின்சாரக் கண்ணாவில் தன்னுடைய மகனின் காதலுக்காக விஜய்வுடைய குடும்பமே காதலியின் வீட்டில் ஏழ்மையான வேடம் அணிந்து கொண்டு அந்த வீட்டில் வேலைக்காரர்களாக இருப்பார்கள். இதுதான் இரண்டாவது கதை.

-விளம்பரம்-

இந்நிலையில் எதிரி திரைப்படத்தின் கதையையும் மின்சாரக் கண்ணா திரைப்படத்தின் கதையையும் ஒன்றாக இனைத்தால் வருவது தனுஷ் நடித்திருக்கும் உத்தம புத்திரன். என்னுடைய இரண்டு கதைகளை இணைத்து முதலில் தெலுங்கில் படம் எடுத்தார்கள் பின்னர் தெலுங்கிலிருந்து மீண்டும் தமிழில் படம் எடுத்துவிட்டார்கள் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

கடந்த 2008ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான “ரெடி” என்ற திரைப்படத்தின் மரு ஆக்கம் தான் தனுஷ் நடித்திருந்த உத்தம புத்திரன் திரைப்படம். இப்படத்தில் கதாநாயகனாக தனுஷும், கதாநாயகியாக ஜெனிலியாவும் நடித்திருந்தனர். அதோடு விவேக், பாக்யராஜ், கருணாஸ், ராஜேந்திரன், சிரியா சரண், நம்பியார் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். 2010 ஆன் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும் வசூலையும் பெற்றிருந்தது.

Advertisement