குபேரா படம் தொடர்பாக தேவிஸ்ரீ பிரசாத் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் குபேரா. இந்த படத்தை இயக்குனர் சேகர் கம்முலா என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஸ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தனுஷின் நடிப்பும் இயக்குனர் உடைய வேலைப்பாட்டையும் பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் குபேரா படம் தொடர்பாக தேவிபிரசாத் அளித்த பேட்டியில், இயக்குனர் சேகர் சார் உடன் சேர்ந்து இதற்கு முன்னாடியே வேலை பார்க்க இருந்தது. ஆனால், அப்போது அது அமையவில்லை. இப்போது தான் அந்த வாய்ப்பு அமைந்தது. என்னுடைய பாடல்கள் அவருக்கு ரொம்பவே பிடிக்கும்.
தேவி ஸ்ரீ பிரசாத் பேட்டி:
அதேபோல் அவருடைய படங்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் அதிகமாக காதல் கதை தான் பண்ணுவார். இந்த முறை புதிய ஜானரில் எடுத்து இருக்கிறார். அந்த படத்துக்கு நான் இசையமைத்ததில் ரொம்ப சந்தோஷம். சொல்லப்போனால் இந்த படத்தினுடைய கதையை சொன்னதுமே அவருக்கு கை கொடுத்து பாராட்டினேன். கதையை அவர் சொன்னது போலவே படத்திலும் உண்மைக்கு நெருக்கமாக எடுத்து இருக்கிறார். அதோடு சேகர் சார் கதையை சொல்லும்போது இந்தந்த இடங்களில் இந்த மாதிரியான டிரீட்மென்ட் கொடுக்கலாம் என்று பிளான் பண்ணிட்டேன்.

குபேரா பற்றி சொன்னது:
சேகர் சார் படங்களில் இசைக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பார். 'தீம் ஆஃப் குபேரா' படத்தில் பல வகைகளில் பயன்படுத்தியிருக்கிறேன். ராஜமௌலி சார் கூட அந்த தீம் பாடலை பார்த்து பாராட்டி இருந்தார். அதேபோல் நாகர்ஜுனா சாருக்கு ஸ்டைலிஷ் ஆன இசை கொடுக்கணும் என்று பிளான் பண்ணி இருந்தேன். மேலும் சுயாதீன இசை கலைஞராக வந்து ஹிட் கொடுப்பது ரொம்ப அழகான விஷயம். ஆனால், ஒரு விஷயம் பாடல் ஹிட் ஆகுற வரைக்கும் எவ்வளவு போராட வேண்டியிருக்குமோ அதேபோல ஒரு பாடல் பெரிய ஹிட் அடித்த பிறகும் பெரிய போராட்டம் இருக்கும். நான் 16 வயதில் இசையமைப்பாளராக ஆனேன்.
https://www.youtube.com/watch?v=M5Q7eza20ds
சிரஞ்சீவி செய்த விஷயம்:
இளம் வயதில் இசையமைப்பாளர் ஆனது நான் தான் என்று நினைக்கிறேன். வேறு யாரும் அந்த பட்டியலில் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. நான் தேவி படத்தின் மூலமாகத்தான் சினிமாவுக்கு வந்தேன். அந்த படம் பேண்டஸி படமாக இருந்தது. அந்த படத்தில் வழக்கமான பேண்டஸியை சேர்க்காமல் வேறு மாதிரி இசை அமைத்தேன். அந்த படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதேபோல் எனக்கு சிரஞ்சீவி சார் ரொம்ப பிடிக்கும். அவர் நடித்த படத்துக்கு நான் இசையமைக்கும்போது ஒரு முறை என்னோட பாட்டுக்கு அவர் நடனம் ஆடுவதை பார்க்கப் போனேன். அவர் எப்போதுமே என்னை மை பாய் என்று தான் சொல்லுவார். அப்படி அவர் நடனம் ஆடுவதை நேரில் பார்த்துவிட்டு கிளம்பும்போது அவர், என்னைகூப்பிட்டு ஒரு பாடலில் கையில் கட்டு போட்டு நடிக்க வைத்தார்.

கமல் செய்த விஷயம்:
அதே மாதிரி பிரபுதேவா இயக்குனராக அறிமுகமான முதல் படத்துக்கு நான் தான் மியூசிக் போட்டேன். அவர் என்னையும் சிரஞ்சீவி சாரையும் ஒரு கோரியோ பண்ண வைத்த தருணம் இன்னும் என்னால் மறக்க முடியாது. எனக்கு அந்தப் பாடலில் சுத்தமாக நடனமாட வரவில்லை. அந்த சாங் ஷூட் பண்ணி முடித்த பின் சிரஞ்சீவி சார் அவருடைய கையால் என் நெற்றியில் வைத்து சல்யூட் பண்ணி ஒரு போட்டோ எடுத்தார். அதேபோல் கமல் சாரும் என்னை ஹீ இஸ் மை பாய் என்று கூப்பிடவார். நீல வானம் பாடலுக்கு திடீரென்று கிட்டார் எடுத்துக்கொண்டு வரச் சொன்னார். அந்த பாடலும் ரிவர்ஸில் இருக்கும். அந்த பாடலில் என்னை நடிக்க வைத்தார். இதெல்லாம் ஒரு அழகான விஷயம். ரொம்ப நாள் கழித்து பார்க்கும்போது நினைவுகளாக இருக்கும். சிரஞ்சீவி சார், கமல் சார் அவர்களுக்கு இருக்கிற பிஸியான வேலைகளில் இதெல்லாம் பண்ணனும்னு அவசியம் இல்லை. ஆனால், அவர்கள் எனக்காக பண்ணினார்கள் என்று கூறியிருக்கிறார்.






