புது முயற்சியில் குடிமகான் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

0
496
- Advertisement -

இயக்குனர் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்க படம் குடிமகான். இந்த படத்தில் விஜய் சிவன், சாந்தினி, சுரேஷ் சக்ரவர்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். தனுஜ் மேனன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மெய்யேந்திரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் குடிமகான் படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வேலை செய்பவராக இருக்கிறார் ஹீரோ விஜய் சிவன். இவருடைய மனைவி தான் சாந்தினி. இவருடைய தந்தை சுரேஷ் சக்கரவர்த்தி. மிடில் கிளாஸ் ஆக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்திற்காக விஜய் சிவன் உழைத்துக் கொண்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் விஜய் சிவனுக்கு குளிர்பானம் குடிக்கும் பழக்கம் இருக்கிறது. ஒரு கட்டத்தில் குளிர்பானம் குடித்தாலே போதை ஏறும் என்ற வினோத நோயில் ஹீரோ சிக்கிக் கொள்கிறார்.

- Advertisement -

படத்தின் கதை:

இப்படி ஒரு நிலையில் ஏடிஎம்மில் பணம் நிரப்பும்போது விஜய் சிவனுக்கு போதை ஏறி பணம் வைக்கும் மெஷினில் 100 ரூபாய் வைப்பதற்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகளை வைத்து விடுகிறார். இந்த பணங்கள் எல்லாம் வாடிக்கையாளர்கள் கைக்கு சென்று விடுகிறது. இதனால் விஜய் சிவனை வேலையை விட்டு அனுப்பி விடுகிறார்கள். இதனை அடுத்து தன்னுடைய பணத்தை எடுத்த வாடிக்கையாளர்களை தேடி விஜய் சிவன் அழுகிறார்.

படத்தில் ஹீரோ:

இப்படி அவர் செல்லும்போது பல கலக்கலான கலாட்டா விஷயங்கள் எல்லாம் நடக்கிறது. இறுதியில் விஜய் சிவன் பணத்தை மீட்டாரா? மீண்டும் அவருக்கு வேலை கிடைத்ததா? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் விஜய் சிவன் தன்னுடைய அப்பாவித்தனமான கதாபாத்திரத்தில் யதார்த்தமாக நடித்திருக்கிறார். மது குடிக்காமலேயே போதை ஏறி அவர் செய்யும் அலப்பறைகள் எல்லாம் வேற லெவலில் இருக்கிறது. குடும்பத் தலைவராகவும், மனைவியிடம் பதுங்குவது, குழந்தை இடம் பாசம் காட்டுவது போன்ற எதார்த்தமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

அது மட்டும் இல்லாமல் பணத்திற்காக வாடிக்கையாளர் வீடுகளில் ஏறி இறங்கி அவர் கெஞ்சும் காட்சிகள் எல்லாம் அருமையாக வந்திருக்கிறது. இவரை அடுத்து சாந்தினி குடும்பத் தலைவி கதாபாத்திரத்தில் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து படத்தில் வரும் பிற கதாபாத்திரங்களும் தங்களுடைய வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்கள். படத்தில் வரும் காமெடிகள் எல்லாம் ரசிக்க வைத்திருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் திரையரங்கில் சிரிப்பலையை அதிர விட்டிருக்கிறார் இயக்குனர் என்று சொல்லலாம். தனுஜ் மேனனின் இசை, மெய்யெந்திரன் ஒளிப்பதிவு படத்திற்கு சுவாரசியத்தை கொடுத்திருக்கிறது. குடியால் ஏற்படும் பாதிப்புகளையும், விளைவுகளையும் இயக்குனர் தெளிவாக காண்பித்திருக்கிறார். ஒரு வினோதமான நோயால் ஏற்படும் பிரச்சனையால் ஒரு குடும்பம் எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்பதை காமெடி கலந்த பாணியில் இயக்குனர் காண்பித்திருப்பது பாராட்டுகள். இருந்தாலும், ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள். முதல் பாதி பொறுமையாக நகர்கிறது. ஆக மொத்தம் ஒரு சுமாரான படமாக குடிமகான் இருக்கிறது.

பிளஸ்:

கதாநாயகனின் நடிப்பு சிறப்பு

ஒரு வினோத நோய் குறித்த புது வித மெசேஜை இயக்குனர் காண்பித்து இருக்கிறார்

படத்தின் பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்க்கு பக்கபலமாக இருக்கிறது

காமெடிகள் படத்தில் வொர்க் அவுட் ஆகி இருக்கிறது

மைனஸ்:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

புதுமுக நடிகர்கள் என்பதால் பார்வையாளர்கள் மத்தியில் சென்றடைய கொஞ்சம் கஷ்டம்

முதல் பாதி பொறுமையாக செல்கிறது

மொத்தத்தில் குடி மகான்- கலகலப்புக்கு பஞ்சமில்லை.

Advertisement