ஹார்ட் அட்டாக்னு தான் ஹாஸ்பிடல்க்கு போனோம், ஆனா அங்க – குமரிமுத்துவின் மறைவிற்கான காரணத்தை சொன்ன அவரின் மகள்

0
729
Kumarimuthu
- Advertisement -

நடிகர் குமரிமுத்துவின் இறப்பிற்கு காரணம் இதுதான் என்று அவருடைய மகள் எலிசபெத் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சினிமாவை பொறுத்த வரை ஒவ்வொரு காமெடி நடிகர்களுக்கும் தனிப்பட்ட பாடி லாங்குவேஜ் இருக்கும். ஆனால், தனது வித்யாசமான சிரிப்பையே தனது தனிப்பட்ட அடையாளமாக வைத்து சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருந்தவர் குமரிமுத்து . மக்களை சிரிக்க வைக்க காமெடியன்கள் தனது காமெடிகள் மூலம் கஷ்டப்பட்ட நிலையில் வெறும் சிரிப்பை வைத்து ரசிகர்களை சிரிக்க வைத்த ஒரே நடிகர் என்றால் அது குமாரி முத்து தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

-விளம்பரம்-

நாகர்கோவிலில் பிறந்த இவர் கடந்த 1979 ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘உதிரி பூக்கள்’ படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் காமெடி நடிகராக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அங்கீகாரத்தை பிடித்தார் குமரிமுத்து. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி , கமல் துவங்கி விஜய், அஜித் வரை பல்வேறு தலைமுறை நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார் குமரிமுத்து. இறுதியாக விஜய் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘வில்லு’ படத்தில் நடித்திருந்தார் குமரிமுத்து. அதன் பின்னர் உடல் நலக்குறைவால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

- Advertisement -

குமரிமுத்து மகள் அளித்த பேட்டி:

நடிகர் குமரிமுத்து தனது 75 வது வயதில் கடந்த பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி காலமானர். மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமரிமுத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். குமரிமுத்துவின் மறைவிற்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் குமரிமுத்துவின் மகள் எலிசபத் குமரிமுத்து சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய தந்தை குறித்து கூறியது, அப்பா ரொம்ப அன்பானவர். அவருடைய சிரிப்பு, தமிழ் புலமை எல்லோருக்குமே தெரியும்.

குமரிமுத்து குறித்த தகவல்:

ஆனால், அவருடைய அன்பு குடும்பத்தினருக்கு மட்டும் தான் தெரியும். சென்னைக்கு வந்து அப்பா ரொம்ப கஷ்டப்பட்டார். அப்போது அவர் உண்ண உணவில்லாமல், தங்க இடமில்லாமல் நடைபாதைகளில் எல்லாம் படுத்திருந்தார். அதற்கு பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு அப்பா சினிமாவில் நுழைந்தார். 70 வயது வரை அப்பா சினிமாவில் இருந்தார். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அப்பாவை எல்லோரும் சிரிப்பை வைத்து தான் அடையாளம் செய்வார்கள். ஆனால், வீட்டில் ஒரு நாளும் அவர் சிரிப்பதில்லை.

-விளம்பரம்-

குமரிமுத்து செய்த தானம்:

சினிமாவில் மட்டும்தான் அவர் அப்படி சிரிப்பார். அது ரொம்ப கஷ்டமான ஒன்று என அப்பாவே எங்களிடம் பலமுறை சொல்லுவார். அடி வயிற்றில் இருந்து சிரிக்க வேண்டும். ஆனால், அவர் பொதுவாக அவ்வாறு சிரிப்பவரே கிடையாது. எங்களுக்கு அப்பா எதையும் சேர்த்து வைக்கவில்லை. அத்தனையும் தானம் தர்மமே செய்து விட்டார். ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கினால் 45 ஆயிரம் தானம் பண்ணி விடுவார். வீட்டுக்கு 5000 தான் தருவார். தனக்கு மிஞ்சி தான் தானம் தர்மம் என்று சொல்வார்கள். தனக்கு இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு தானம் செய்பவர்தான் என்னுடைய அப்பா. ஒரு மாதத்திற்கு 40 குடும்பங்களுக்கு மாதம் மாதம் பணம் அனுப்புவார்.

குமரிமுத்து மரணத்திற்கு காரணம்:

எங்களுக்கு அப்பா சொத்து சேர்க்கவில்லை என்று குறையே வருத்தமோ எங்களிடம் இல்லை. ஆனால் அப்பாவிடம் அதிக உதவி வாங்கியவர்கள் அவர் இறப்பிற்கு கூட வரவில்லை. அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் என்று நினைத்து தான் நாங்கள் மருத்துவமனையில் சேர்த்தோம். ஆனால் அதன் பிறகு தான் நுரையீரல் தொற்றி பாதித்தது என்பது தெரிந்தது. சிகிச்சை முடிந்து கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டர் சொன்னார்கள். ஆனால், கோவையில் ஊழியம் செய்வதற்கு அவர் டேட் கொடுத்திருந்தார். போகிற உயிர் போக தானே போது, அது ஊழியம் செய்து போகட்டும் என்று சொல்லிவிட்டு தான் அப்பா போனார். இறக்கப்போறேன் என்று தெரிந்தே அவர் போனார். கோவை போயிட்டு வந்ததும் நேர மருத்துவமனையில் சேர்த்தோம். அப்பா இரண்டு நாளில் இறந்து விட்டார் என்று கண் கலங்கியபடி எலிசபெத் கூறியிருந்தார்.

Advertisement