ஆமா, கும்கி படத்துல விக்ரம் பிரபுவிற்கு தம்பி ராமையா என்ன உறவு வேணும் ? – இவர் ஒன்னு சொல்றாரு அவர் ஒன்னு சொல்றாரே. வீடியோவ நீங்களே பாருங்க.

0
561
kumki
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், முன்னணி நடிகர் பிரபுவின் மகனும் ஆவார். இவர் லண்டனில் படிப்பை முடித்தார். பின் ஆரம்பத்தில் இவர் சினிமாவில் உதவிஇயக்குனராக இருந்தார். பின் இவர் விஷ்ணுவர்தனின் உதவி தயாரிப்பாளராக சினிமாவில் பணியாற்றி இருக்கிறார். அதற்கு பிறகு லிங்குசாமியின் தயாரிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் இவருக்கு பெயர் வாங்கித் தந்தது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 2-42.jpg

இதனை தொடர்ந்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளக்கார துரை, இது என்ன மாயம், வீர சிவாஜி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர் நடித்த படத்தின் காட்சியை கிண்டல் செய்து மீம்ஸ் எல்லாம் போட்டு உள்ளார்கள். அது என்ன படம் என்றால், கும்கி. 2012ஆம் ஆண்டு பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த முதல் கும்கி. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். இந்த படத்தில் தம்பி ராமையா விக்ரம் பிரபுவின் மாமாவாக நடித்திருந்தார்.

- Advertisement -

கும்கி படம் காட்சி:

இந்த படம் வெளிவந்து மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்று சொல்லலாம். இந்நிலையில் இந்த படத்தில் வரும் ஒரு காட்சியை நெட்டிசன்கள் பயங்கரமாக கிண்டல் கேலி செய்து இருக்கிறார்கள். அப்படி என்ன அந்த வீடியோவில் இருக்கிறதென்றால், விக்ரம் பிரபு, தம்பி ராமையா பார்த்து என் தம்பியை நல்லா பாத்துக்கோ, அவருக்கு உன்ன விட்டா வேற யாரும் இல்ல. நீ தான் கடைசி காலத்தில் சோறு போட்டு பார்க்கனும் சொன்னதுனால தான் பாத்துட்டு இருக்கேன் என்று சொல்லுவார்.

கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்:

உடனே தம்பி ராமையா என் தங்கச்சி சொன்ன காரணத்திற்காக தான் நான் உன் கூட இருக்கேன் என்று சொல்லுவார். ஆகவே, பிரபு சொன்னது போல் அவர் அக்காவா, தம்பி ராமையா சொல்வது போல் தங்கையா என்று தெரியாமலேயே காட்சியை எடுத்திருக்கிறார்கள். இப்படி இவர்கள் இருவரும் பேசிய காட்சியை வடிவேலுவின் காமெடியை போட்டு பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு என்று கிண்டல் செய்யும் விதமாக வெளியிட்டு இருக்கிறார்கள். இதை நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் நெட்டிசன்கள் கண்டுபிடித்து அதை சோசியல் மீடியாவில் கலாய்த்து வருகிறார்கள்

-விளம்பரம்-

‘டாணாக்காரன்’ படம்:

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த படம் புலிக்குத்தி பாண்டி. இந்த படத்தை முத்தையா இயக்கி இருந்தார். இந்த படத்தில் லட்சுமிமேனன், சமுத்திரகனி, சிங்கம்புலி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து விக்ரம் பிரபு அவர்கள் ‘டாணாக்காரன்’ என்ற படத்தில் நடித்துஇருந்தார். இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்து இருந்தார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார் மற்றும் எஸ்ஆர் பிரபு தயாரித்திருக்கிறார்.

This image has an empty alt attribute; its file name is dd-1.jpg

விக்ரம் பிரபு நடிக்கும் படங்கள்:

இந்த படத்தை அசுரன், ஜெய் பீம் போன்ற படத்தில் வில்லனாக நடித்த தமிழ் தான் இயக்கி இருந்தார். மேலும். இவர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து விக்ரம் பிரபு, கார்த்திக் சவுத்ரி இயக்கத்தில் பாயும் ஒளி நீ எனக்கு, மணிவேல் இயக்கத்தில் பகையே காத்திரு போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement