குன்றத்தூர் அபிராமிக்கு புழல் சிறையில் நடந்த சோகம்..! போலீசார் விளக்கம்.!

0
1134

சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து போலீசாரிடம் சிக்கியுள்ள அபிராமியின் செய்திகள் தான் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள அபிராமியை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

abirami 1

கள்ள காதலுக்காக தனது கணவர் மற்றும் பெற்ற பிள்ளைகளையே கொள்ள நினைத்த அபிராமி தற்போது சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். சிறையில் 3 பெண்களுடன் அடைக்கப்பட்ட நாளில் இருந்தே சிறையில் சோகமாக அமர்ந்திருந்த அபிராமி, சிறையில் அவருக்கு அளிக்கப்படும் உணவுகளை சரியாக சாப்பிடுவதில்லையாம். அங்கே இருக்கும் சக பெண் கைதிகள் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்து வந்துள்ளார்.

மனதாலும் உடலாலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அபிராமி சரியாக சாப்பிடாமல் இருந்ததால் அவரை சிறை காவலர்கள் சாப்பாடு பரிமாறும் இடத்திற்கு அழைத்து சென்றால் அங்கும் கைதிகள் அவரை கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்கள் சரியாக சாப்பிடாததால் நேற்று (செப்டம்பர் 6) மாலை திடீரென்று அபிராமி மயக்கம் போட்டு விழந்துள்ளார்.

Abirami

மயங்கி விழுந்த அபிராமியை பின்னர் சிறை காவலர்கள் சிறையில் இருக்கும் மருத்துவ அறைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் அவர் உடல் நலம் தேறி நலமடைந்துள்ளார். தனது தவறை உணர்ந்து தனது பிள்ளைகளையும், கணவரையும் பிரிந்து வாழும் அபிராமி கொலை செய்வதற்கு முன்னாள் கொஞ்சம் யோசித்திருக்கலாம் அல்லவா.