அந்த ஒரு வார்த்தையை கேட்டு தான் நான் என் குழந்தைகளை கொன்னேன்..! சிறையில் புலம்பும் அபிராமி!!

0
4199
Abirami-kundrathur
- Advertisement -

சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து போலீசாரிடம் சிக்கியுள்ள அபிராமியின் செய்திகள் தான் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள அபிராமியை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

-விளம்பரம்-

abirami 1

- Advertisement -

கள்ள காதலுக்காக தனது கணவர் மற்றும் பெற்ற பிள்ளைகளையே கொள்ள நினைத்த அபிராமி தற்போது சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். சிறையில் 3 பெண்களுடன் அடைக்கப்பட்ட நாளில் இருந்தே சிறையில் சோகமாக அமர்ந்திருந்த அபிராமி,தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சக கைதிகளுடன் பேச தொடங்கியுள்ளாராம்.

சக கைதிகளுடன் பேசிய போது அபிராமி பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. அதில் அவர்களுடன் பேசும் போது இந்த பாழாய் போன முயூசிகலியால் தான் என்றும், நானும் சுந்தரமும் முயூசிகலி மூலம் தான் பழக்கமானோம் என்று கூறியுள்ளார்.அதே போல சுந்தரம் சொல்லித்தான் என் பிள்ளைகளை கொன்றேன் என்றும் அபிராமி கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Abirami

மேலும், உன் குழந்தைகளையும் கணவரையும் கொன்றால்தான் நாம் சந்தோஷமாக வாழ முடியும் என்று சுந்தரம் தன்னிடம் கூறியதால், அவர் சொன்னதை கேட்டு என் குழந்தைகளை நானே கொன்றுவிட்டேன் என்று சக கைதிகளிடம் புலம்பியுள்ளார் அபிராமி.

Abirami

சுந்தரம் சொன்ன அந்த ஒரு வார்த்தையை நம்பி தற்போது தனது குழந்தைகளை இழந்து நிர்கதியை நிற்கிறேன். சுந்தரம் மீது இருந்த காதல் என் கண்ணை மறைத்து விட்டது என்று சக கைதிகளிடம் அபிராமி புலம்பி வருவதாக கூறப்படுகிறது. கள்ள காதலருக்காக பிள்ளைகளை கொன்றுவிட்டு தற்போது புலம்பி என்ன பயன்.

Advertisement