மணிமேகலையை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகும் குரேஷி ? டெலீட் செய்யப்பட்ட ட்வீட்.

0
538
Kureshi
- Advertisement -

மணிமேகலையை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து குரேஷி விலக இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் படை இருக்கிறது. இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் இருக்கிறது.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு ஒரு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. மேலும், முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசன் ஒளிபரப்பாகி தற்போது . அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். மேலும், இந்த நிகழ்ச்சியில் கோமாளிக்கு இணையாக நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து வந்த வெங்கடேஷ் பத் மற்றும் தாமு காமெடி செய்கிறார்கள்.

- Advertisement -

குரேஷி குறித்த தகவல்:

தற்போது இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் குரேஷி. காமெடி ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் குரேஷி. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரையில் தான். பின் இவர் வேலை தேடி சென்னைக்கு வந்தார். பல கனவுகளுடன் இலட்சியங்கள் உடன் சென்னைக்கு வந்தவர்களுள் குரேஷியும் ஒருவர்.

சின்னத்திரையில் குரேஷி:

பின்னர் சரியான வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் மிமிக்ரி செய்யும் திறமையை பயன்படுத்தி இவர் விஜய் டிவிக்குள் நுழைந்தார். மேலும், இவர் தன்னுடைய திறமையாலும் கடின உழைப்பாலும் இன்று விஜய் டிவியில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். பின் இவர் கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அந்த சீசனின் டைட்டில் வின்னரும் ஆனார். இதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிக பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருக்கிறார்.

-விளம்பரம்-

குரேஷி நடித்த படம்:

பின் இவருக்கு சின்னத்திரை சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு இவர் சரவணன் இருக்க பயமேன் என்ற படத்திலும் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து நடித்து இருந்தார். அப்படியே இவர் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், போட்டியாளராக பங்கு பெற்று வருகிறார். தற்போது இவர் விஜய் டிவியில் கலக்கி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இவர் அடிக்கும் கவுண்டர்கள், காமெடிகள் எல்லாம் ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறது.

குரேஷி பதிவு:

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து குரேஷி விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, குரேஷி தன் டீவ்ட்டர் பக்கத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பழைய நினைவுகளை பதிவிட்டு நன்றி என்று கூறியிருக்கிறார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வந்தது. உடனே குரேசி தன் ட்விட்டர் பதிவை டெலீட் செய்திருக்கிறார். பின் உடல் மண்ணுக்கு உயிர் குக் வித் கோமாளிக்கு என்று மீண்டும் ஒரு டீவ்ட் செய்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் பலருமே குழப்பத்தில் இருக்கிறார்கள். உண்மையாலுமே குரேசி நிகழ்ச்சியை விட்டு வெளியேறப் போகிறாரா? இல்லை தவறுதலாக பதிவிட்டாரா? என்பது தெரியவில்லை. இனிவரும் காலங்களில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement