குருவி படத்தில் நடிச்ச பொண்ணா இது ? விஜய் டிவியின் சூப்பர் ஹிட் பார்ட் 2 சீரியல்ல நோட் பன்னீங்களா ?

0
1354
- Advertisement -

குழந்தை நட்சத்திரமாக இருந்து பின்னர் தங்கை, கதாநாயகி என தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை ஷாதிகா. தன்னையுடைய மழலை பருவத்திலேயே திரையில் நடிக்க தொடங்கினாலும் பின்னர் குடும்பத்தின் ஒத்துழைப்பால் 12ஆம் வகுப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 90 சதவிகிதத்திற்கு மேலே மதிபெண் எடுத்த இவர் முதலில் அரிராசன் இயக்கத்தில் வெளியாக “மங்கை” என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார்.

-விளம்பரம்-

பின்னர் தமிழ் சினிமாவில் அரசியல் வாதி மற்றும் நடிகரான சீமானின் “வீர நடை” என்ற படத்தின் மூலம் தான் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். சிறு வயதில் சினிமாவிற்குள் நுழைந்தாலும் தன்னுடைய படிப்பை நிறுத்தாமல் தொடர்ந்து மேற்க்கொண்டு வந்திருக்கிறார். அதற்கு பின்னர் ரோஜா வானம் படத்தில் “குட்டி லைலா”என்ற கதாபாத்திரத்திலும் சத்யராஜ் நடித்த , ராமசந்திரன் படத்தின் நடிகர் சத்யராஜின் மகளாகவும் நடித்தார்.

- Advertisement -

அதை தொடர்ந்து சமஸ்தானம் படத்தில் சரத்குமாரின் மகள் அதே போல ஆனந்தம் திரைப்படத்தில் முரளியின் மகள் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.பின்னர் கொஞ்சம் வளர்ந்ததும் தற்போது உள்ள முன்னனி நடிகர்களான விஜய், அஜித் போன்றவர்களின் படத்தில் அவர்களுக்கு தங்கையாக நடித்துள்ளார். உதாரணமாக விஜய் நடித்த “குருவி” படத்தில் விஜய்க்கு தங்கயாகவும், நடிகை சுனைனா நடித்திருந்த “மாசிலாமணி” படத்தில் அவருக்கு தங்கயாகவும் நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட 30 படங்களுக்கு மேலே நடித்துள்ளர். மேலும் இந்த படங்களில் நடித்து கொண்டிருக்கும் போதுதான் இவருக்கு சுட்டி டிவியில் தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்துள்ளது.சுட்டி டிவியில் மூன்று வருடங்கள் தொகுப்பாளராக பணியாற்றியுள்ள இவர் குரலை அணைத்து குழந்தைகளும் ரசித்தினால் பெரிய பிரபலம் கிடைத்து. அதுமட்டுமில்லாமல் அந்த பிரபலம் இவரை மற்ற நடிகர்களுக்கு குரல் கொடுக்கும் நடிகையாக மாற்றியது.

-விளம்பரம்-

அதற்கு பின்னர் நடிகர் கார்த்திக் நடித்திருந்த “நான் மகான் அல்ல” திரைப்படத்தில் தான் இவருக்கு முன்னணி கதாபாத்திரம் கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு பாயும் புலி, நெஞ்சில் துணிவிருந்தால், ஏஞ்சலினா என பல திரைப்படங்களில் முன்னி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் நடித்த “என் வீடு முற்றத்தில் ஒரு மாமரம்” என்ற திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வானது குறிப்பிடதக்கது.

மேலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவரை 8 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் அவரது இன்சாட்ஸ்கிராம் பக்கத்தில் சேலையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சுட்டி டிவியில் இருந்த தொகுப்பாளினி ஷாதிகா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். அதே போல் இவர் பாரதி கண்ணம்மா 2 தொடரிலும் நடித்து வருகிறார்.

Advertisement