குஷ்பூ என்ற பெயர் வந்ததற்கான காரணத்தை முதன் முதலாக நடிகை குஷ்பூ கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பு. அந்த காலத்திலேயே இவருக்கு ரசிகர்கள் சிலை வைத்து இருந்தார்கள். மேலும், இவர் நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு திகழ்கிறார்.
குஷ்பூவின் இயற்பெயர் நக்கர்த் கான். இவர் செப்டம்பர் 29, 1970 இல் மும்பை மாகாணத்தில் உள்ள மகாராஷ்டிராவில் பிறந்தவர். இவர் 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின் 1989ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமா உலகில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
குஷ்பூ திரைப்பயணம்:
மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது குஷ்பூ அவர்கள் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். இவர் சினிமா படங்களில் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும், நடுவராகவும், நடிகையாகவும் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த ‘அண்ணாத்த’ படத்தில் குஷ்பூ நடித்து இருந்தார்.
குஷ்பூவின் மீரா சீரியல்:
இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூலும் வாரி குவித்து இருந்தது. இதனை தொடர்ந்து குஷ்பூ பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அதேபோல் குஷ்பு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மீரா என்ற சீரியலில் நடித்து இருந்தார். இந்த தொடர் பெண்கள் சுதந்திரம், பெண்கள் உரிமை ஆகியவை மையமாக கொண்டதாக இருக்கிறது. இந்த தொடர் 62 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பானது.
குஷ்பூ அளித்த பேட்டி:
இந்நிலையில் குஷ்பூ அவர்கள் சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் தனக்கு குஷ்பூ என்ற பெயர் வந்தது குறித்த காரணத்தை கூறியிருந்தது, எனக்கு மொத்தம் மூன்று அண்ணன்கள். வீட்டில் நான் தான் கடைக்குட்டி. நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மும்பையில் தான். மும்பையில் நாங்கள் வசித்த பகுதி ஒரு குட்டி இந்தியா மாதிரி என்று சொல்லலாம். பின் நடிப்புக்காக நான் சென்னை வந்த பிறகு என்னுடைய மூன்று அண்ணன்களும் என்னுடனே வந்து விட்டார்கள். அப்போது அண்ணனுக்கு நடிகை ஹேமமாலினி மற்றும் அவர்களது குடும்பம் நல்ல பழக்கம். அதனால் அவருடன் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்வோம்.
குஷ்பூ பெயர் வந்த காரணம்:
அப்படி ஒருமுறை சென்றபோது தயாரிப்பாளர் ரவி சோப்ரா மற்றும் அவருடைய தந்தை பி ஆர் சோப்ரா அங்கு வந்திருந்தார்கள். அவர்கள் என்னை பார்த்ததும் இந்த பெண் நடிப்பாளா? என்று கேட்டார்கள். நான், நடிச்சா என்ன தருவீர்கள்? என்று கேட்டேன். உனக்கு என்ன வேண்டும் என அவர்கள் கேட்டார்கள். தினமும் ஒரு கப் வெண்ணிலா ஐஸ்கிரீம் எனக்கு தர வேண்டும் என கேட்டேன். அப்போது எனக்கு எட்டு வயது தான். பின் அவர்கள் சிரித்துக் கொண்டு தரேன் என்று சொன்னார்கள். அவர்கள் தான் என்னுடைய பெயரை குஷ்பு என மாற்றினார்கள். இஸ்லாத்தில் நிக்கத் என்று தான் பெயர் உண்டு. என்னுடைய பெயர் நக்கத். இது பெர்ஸிய மொழி. அதனால் அதற்கு ஈடான ஹிந்தி பெயரை ‘குஷ்பு’ என எனக்குச் சூட்டினார்கள் என்று கூறி இருந்தார்.