திருமணத்திற்காக மதம் மாறினேனா? நெட்டிசன்கள் கேலிக்கு பதிலடி கொடுத்த குஷ்பு.

0
439
Kushboo
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் இன்றளவும் நமது மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் நடிக்க என்றால் அது குஷ்பு தான் .நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அந்த பெருமையும் குஷ்புவிற்கு தான் சேரும் .தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு சில ஆண்டுகளாக பல சர்ச்சைகலில் சிக்கியுள்ளார். இவர் சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார். பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

-விளம்பரம்-

பின்னர் நடிகை குஷ்பூ 90 களில் உள்ள தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகவும் விளங்கியுள்ளார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது குஷ்பூ அவர்கள் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியில் பிரமுகராக இருந்த போது இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி மீதும் ,பா.ஜா.கா மீதும் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை வைத்துவந்தார்.

- Advertisement -

மேலும், ட்விட்டரில் நிறைய நெகட்டிவ் கருத்துக்கள் வருவதால் சமீபத்தில் ட்விட்டர் கணக்கை கூட முடிக்கி இருந்தார் குஷ்பு. சமீபத்தில் தான் மீண்டும் ட்விட்டரில் இணைந்தார். இந்த நிலையில் இஸ்லாமியர்களின் புனித விரதமாக கருதப்படும் ரம்ஜான் நோம்பு துவங்கிய நாளில் நடிகை குஷ்பு தனது வீட்டின் பூஜை அறை புகைப்படத்தை பதிவிட்டார். அந்த அறையில் இந்து கடவுள்களின் புகைப்படங்களும் இருந்தது.

இந்து கடவுள்களின் புகைப்படங்கள் இருப்பதை கண்ட ரசிகர் ஒருவர். உங்களை முஸ்லிம் என்று நினைத்தேன் என்னுடைய தவறுதான் இருப்பினும் அது ஒன்றும் பிரச்சனை இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த குஷ்பு நான் ஒரு இந்தியன் என்று கூறியுள்ளார்ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர், நீங்கள் மதம் மாறியதற்கு திருமணம் காரணமா ? இல்லை முந்தைய மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதது காரணமா என்று கேள்வி கேட்டிருந்தார்.

-விளம்பரம்-

இதற்கு பதில் அளித்த குஷ்பு நான் என்னுடைய மதத்தை மாற்றிக் கொள்ளவில்லை மேலும் நான் எதற்காக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது மதத்தை பொருத்தது அல்ல என்று பதிலளித்திருந்தார். இருந்தும் குஷ்பூ திருமணத்திற்கு பின்னர் இந்துவாக மதம் மாறிவிட்டார் என்று தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துகொண்டு தான் இருக்கிறது. அதிலும் இவர் பா ஜ கவில் இணைந்ததில் இருந்து இந்த விமர்சனம் அதிகரித்தது.

இப்படி ஒரு நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ள குஷ்பூ ‘எனது திருமணத்தை பற்றி கேள்வி கேட்பவர்கள், நான் என் கணவரை திருமணம் செய்ய மதம் மாறிவிட்டேன் என்று கூறுபவர்கள், தயவுசெய்து கொஞ்சம் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். நம் நாட்டில் இருக்கும் சிறப்பு திருமணம் சட்டம் குறித்து அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை என்பது துரதிஷ்டமே. திருமணத்திற்காக நான் மதம் மாறவும் இல்லை, மதம் மாற என்னை யாரும் வற்புறுத்தவும் இல்லை. எனது 23 வருட திருமண நம்பிக்கை மரியாதை, சமத்துவம் மற்றும் அன்பின் அடிப்படையில் உருவானது என்று தெரிவித்துள்ளார்.

Advertisement