கேரளா ஸ்டோரி படத்தை பார்த்துவிட்டு குஷ்பூ போட்ட பதிவு – என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
1035
Kushboo
- Advertisement -

தி கேரளா ஸ்டோரி படம் குறித்து நடிகை குஷ்பு பதிவிட்டு இருக்கும் ட்வீட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தி கேரளா ஸ்டோரி. இந்த படத்தில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்தானி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தை விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்து இருக்கிறார். இந்த படம் இந்தியில் உருவாகி பேன் இந்திய படமாக சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-
Kerala

படத்தில் கேரளாவில் அல்லா தான் உலகத்திலேயே உயர்ந்த கடவுள் என்றும் ஹிஜாப் அணிந்து கொண்டால் யாரும் பாலியல் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்றும் கல்லூரி ஹாஸ்டலில் இருக்கும் இந்து-கிறிஸ்தவ மாணவிகளை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுகிறார்கள். பின் அவர்களை இஸ்லாமிய இளைஞர்கள் மூலம் காதலிக்க வைத்து திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் செய்து கொண்ட பிறகு அந்த பெண்களை சிரியா, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

- Advertisement -

தி கேரளா ஸ்டோரி படம்:

அங்கு அவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளாவும், பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்துகிறார்கள். இறுதியில் அவர்கள் மதவெறியில் இருந்து விடுவிக்கப்பட்டார்களா? அந்த பெண்களுக்கு விடுதலை கிடைத்ததா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக பல எதிர்ப்புகள் நிலவியது. அதோடு இது இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த படம் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

படம் குறித்த சர்ச்சை:

இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேரளா மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தார்கள். ஆனால், விதிக்கப்பட்ட தடைகள் எல்லாம் மீறி இந்த படம் வெளியாகியிருந்தது. அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் இந்த படம் வெளியான போது திரையரங்குகள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதோடு இந்த படத்திற்கு பல எதிர்ப்புகள் வந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் என பலரும் படத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

குஷ்பூ டீவ்ட்:

அதோடு பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் இந்த படத்துக்கு வரி விலக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு ஆதரவாக பாஜக உறுப்பினர் குஷ்பு பதிவிட்டு இருக்கும் ட்விட் வைரலாகி வருகிறது. அதாவது, படத்தை பார்த்து நடிகை குஷ்பு பதிவிட்ட டீவ்ட், அச்சம் காரணமாகத்தான் தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய வேண்டும் என போராடுகிறார்கள். அப்பட்டமாக சொல்லப்பட்ட உண்மை கதை. அதன் ஒரு பகுதியாக இருப்பதை உணர்ந்து அவர்கள் பயப்படுகிறார்கள். மக்கள் என்ன பார்க்க வேண்டும் என அவர்கள் தீர்மானிக்கட்டும்.

தமிழ்நாட்டில் அரசு போட்ட உத்தரவு:

மற்றவர்களுக்காக நீங்கள் அதனை முடிவு செய்ய வேண்டாம். இந்த படத்தை தடை செய்ய தமிழ்நாடு அரசு பொய்யான காரணங்களை சொல்கிறது. ஆனால், இது மக்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். எனக்கு புரிய வைத்ததற்கு நன்றி என்று கூறியிருக்கிறார். இப்படி தி கேரளா ஸ்டோரி படத்தை பார்த்து குஷ்பு பாராட்டி இருக்கும் பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு தமிழ்நாட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தான் இந்த படம் வெளியாகிருந்து. ஆனால், நேற்று முதல் இந்த படத்தை திரையிடவில்லை. ரசிகர்கள் மத்தியிலும் போதிய அளவு இந்த படத்திற்கு வரவேற்பு இல்லை. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகத்தான் இந்த படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் கேரளா ஸ்டோரி படம் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement