‘சேரி என்று சொல்லுக்கு மன்னிப்பு கேட்க முடியாது’ சென்னையில் உள்ள பகுதிகளை குறிப்பிட்டு குஷ்பூ சொன்ன புதிய விளக்கம்.

0
264
- Advertisement -

சேரி என்ற சொல்லுக்கு தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று குஷ்பூ திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். தற்போது சோசியல் மீடியா முழுவதும் மன்சூர் அலிகான் குறித்த சர்ச்சை தான் ட்ரெண்டிங் ஆகி கொண்டு இருக்கிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மன்சூர் அலிகான் திரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையான நிலையில் பல பிரபலங்களும் மன்சூர் அலிகானுக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்து இருந்தது. மேலும், தேசிய மகளீர் ஆணையம் தாமாக முன் வந்து மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடர்ந்தது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து மன்சூர் அலிகான் நீதி மன்றத்தில் ஆஜராகி பின்னர் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். இந்த விவகாரத்தில் பல பிரபலங்கள் கொந்தளித்த நிலையில் குஷ்பூவும் இந்த விவகாரத்தில் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் எக்ஸ் பயணி ஒருவர் ஏன் மணிப்பூர் கலவரம் பற்றி பேசவில்லை என்று குஷிபூவை விமர்சித்து பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

- Advertisement -

இதற்கு பதில் அளித்த குஷ்பூ , திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத் தான் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது இது தான். சாரி, என்னால் உங்களைப் போல சேரி மொழியில் பேச முடியாது. ஆனால், என்ன நடந்தது, என்ன பேசினார்கள், என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கண் விழித்துப் பாருங்கள். மேலும் திமுக உங்களுக்கு சட்டங்களை கற்றுத்தரவில்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது என்று பதிவிட்டிருந்தார்.

இந்த விவாகரத்தில் குஷ்புவிற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில் குஷ்பூவின் இந்த சர்ச்சை கருத்து குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. குஷ்புவின் வீட்டிற்கு முன் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு இருக்கின்றனர். காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் 7 போலீசார் குஷ்புவின் வீட்டின் வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

-விளம்பரம்-

மேலும், நிலைமை சீராகும் வரை இந்த பாதுகாப்பு நீடிக்கும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளரை சந்தித்தார் குஷ்பூ. அப்போது சேரி குறித்த சர்ச்சைக்கு விளக்கமளித்த அவர் ‘இதில், தாழ்த்தப்பட்ட மக்களை குறை கூறி சேரி என்ற வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. திமுகவை விமர்சித்தால் காங்கிரஸ் கட்சி ஏன் போராட வேண்டும்?

வேளச்சேரி என்ற பெயரில் கூடத்தான் சேரி உள்ளது. யாரையும் குறிப்பிட்டு பேசாத போது நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும். நான் தப்பா பேசல, பிரெஞ்ச் மொழியில் சேரி என்ற வார்த்தையை தான் பயன்படுத்தினேன். இதற்காக நான் வருத்தம் தெரிவிக்க மாட்டேன். இந்த சர்ச்சையில் என் வீட்டின் முன்பு போராட்டம் நடத்த இருப்பதாக கூறினார்கள். நான் வீட்டிற்கு வெளியில் காத்திருந்தேன் ஆனால் யாரும் வரவில்லை’ என்றும் கூறியுள்ளார்.

Advertisement