தமிழ் சினிமா உலகில் 80பது கால கட்டங்களில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. இவர் முதன் முதலாக 1980களில் தான் தன்னுடைய திரைப்பட பயணத்தைத் தொடங்கினார். பின் நடிகை குஷ்பூ அவர்கள் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து உள்ளார். குஷ்புவின் மீது உள்ள அன்பினால் அந்த காலகட்டத்திலேயே அவருக்கு கோவில் கட்டினார்கள் அவரின் ரசிகர்கள். தற்போது இவர் சின்னத்திரை,வெள்ளித்திரை என துறைகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறார்.
https://twitter.com/s_venkat007/status/1305235364374818817
இவர் தமிழ் சினிமா திரை உலகில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்க்குமார், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து உள்ளார். நடிகை குஷ்பு திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ , அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம், அந்த வகையில் சமீபத்தில் நடிகர் கார்த்தியின் பிறந்தநாளையொட்டி அவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் டிபியாக வைத்திருந்தார்.
அதற்கு ரசிகர் ஒருவர்'பிறந்த நாளுக்கு போட்டோ போடுவிங்க கல்யாணநாளுக்கு சாமான். இதுதான தங்களின் வாழ்வியல் முறை அதாவது கூத்தாடிகளின் வாழ்க்கை' என்று மோசமாக கமன்ட் செய்து இருந்தார். அதற்கு பதில் அளித்த குஷ்பூ 'நீயெல்லாம் ஒரு பெண்ணின் புகைப்படத்தை டிபியாக வைத்திருக்காய். தமிழன் என்று சொல்ல நீ அசிங்கப்படவேண்டும் உன் அம்மா யாரு கூத்தாடி பத்தி நெறய தெரிஞ்சி வச்சிருக்கயே' என்று பதிலடிகொடுத்துள்ளார்.
https://twitter.com/johnroshan/status/1305353661980184576
இது ஒருபுறம் இருக்க நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமாவில் நடிக்க உள்ளார் குஷ்பூ. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பூ நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. `முள்ளும் மலரும்' படம்போல ரஜினி நடிக்கும் அண்ணண் - தங்கச்சி சென்ட்டிமென்ட் கதை இது. ரஜினிக்குத் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ரஜினியின் மனைவியாக நயன்தாராவும், ரஜினியின் முறைப்பெண்களாக குஷ்புவும், மீனாவும் நடிக்கிறார்கள்.





